ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. மற்ற அனைத்து அணிகளும் ஒரு வாரத்திற்கு முன்பே பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில், சிஎஸ்கே அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருந்ததால், பயிற்சியை தொடங்குவது தாமதமானது.

இந்நிலையில், நேற்று(வெள்ளிக்கிழமை) சிஎஸ்கே அணி பயிற்சியை தொடங்கியது. கடந்த ஓராண்டாக கிரிக்கெட் ஆடாத சிஎஸ்கே கேப்டன் தோனி, சென்னையில் நடந்த பயிற்சி முகாமில் பேட்டிங் பயிற்சி செய்தார். அப்போது ஷாட்டுகளை நேர்த்தியாக ஆடினார்.

இதற்கிடையே, ரெய்னா இந்த சீசனில் ஆடுவது சந்தேகமடைந்த நிலையில், தோனி மீதான சுமை அதிகரித்துள்ளது. ரெய்னா இல்லாததால் தோனியே 3ம் வரிசையில் ஆடலாம் என்ற குரல்கள் எழுந்துள்ளன. தோனியும் அதை பரிசீலித்து 3ம் வரிசையில் இறங்க வாய்ப்புள்ளது. 3ம் வரிசையில் தோனி இறங்கினால், அவருக்கு போதுமான நேரம் கிடைக்கும். அதை பயன்படுத்தி மிரட்டிவிடுவார் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

இந்நிலையில், நேற்று சிஎஸ்கே பயிற்சியை தொடங்கிய நிலையில், பியூஷ் சாவ்லா, ஜடேஜா ஆகியோரின் ஸ்பின் பவுலிங்கையும், ஷர்துல் தாகூரின் ஃபாஸ்ட் பவுலிங்கையும் தோனி தெறிக்கவிட்டுள்ளார். ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என எந்த பாரபட்சமும் இல்லாமல் செம ஃபார்மில் அடித்து நொறுக்கினார். அதிலும், பியூஷ் சாவ்லாவின் பந்தில் அடித்த சிக்ஸர் தான் செம ஹைலைட். தோனியின் அல்டிமேட் ஃபார்மால் சிஎஸ்கே அணியும் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். அந்த வீடியோ இதோ..
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chennai Super Kings (@chennaiipl) on Sep 4, 2020 at 8:24am PDT