Asianet News TamilAsianet News Tamil

தோனி ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த வீடியோ

10 ஓவருக்கு சென்னை அணி வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரெய்னா, 36 ரன்களில் ஆட்டமிழந்த பிறகும் பொறுமை காத்தார் தோனி. 
 

dhoni hits hat trick sixes in last over of innings against rajasthan royals
Author
India, First Published Apr 1, 2019, 6:17 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி, ராயுடு, வாட்சன், கேதர் ஜாதவ் ஆகிய மூன்று விக்கெட்டுகளை 27 ரன்களுக்கே இழந்துவிட்டது. எனினும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 175 ரன்களை குவித்தது. 

176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியும் 14 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி வெற்றியை நோக்கி சென்றார். பிராவோ கடைசி ஓவரை அபாரமாக வீசி ஸ்டோக்ஸை வீழ்த்தியதோடு ராஜஸ்தான் அணியை கட்டுப்படுத்தினார். இதையடுத்து கடைசி ஓவரில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே அணி. 

இந்த போட்டியில் தோனி அருமையாக பேட்டிங் ஆடினார். ராயுடு, வாட்சன், கேதர் ஆகிய 3 விக்கெட்டுகளையும் 27 ரன்களுக்கே இழந்துவிட்ட நிலையில், ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார்.  விரைவில் ரன் குவிக்க வேண்டும் என்று அவசரப்படவில்லை. கடைசி வரை களத்தில் நிற்பதுதான் முக்கியம்; அப்படி நின்றுவிட்டால் கடைசி ஓவர்களில் அடித்துவிடலாம் என்பது தோனிக்கு தெரியும். அதேநேரத்தில் அவசரப்பட்டு விரைவில் அவுட்டாகிவிட்டால் எஞ்சிய ஓவர்கள் வீணாகிவிடும். ஸ்கோரும் குறைந்துவிடும் என்பது தோனிக்கு தெரியும். 

dhoni hits hat trick sixes in last over of innings against rajasthan royals

அதனால் அவசரப்படாமல் நிதானமாக ஆடினார். 10 ஓவருக்கு சென்னை அணி வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரெய்னா, 36 ரன்களில் ஆட்டமிழந்த பிறகும் பொறுமை காத்தார் தோனி. 

17 ஓவரின் முடிவில் சென்னை அணி வெறும் 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. குல்கர்னி வீசிய 18வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸரும் பிராவோ ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியும் விளாசினார். அந்த ஓவரில் 24 ரன்கள் குவிக்கப்பட்டது. ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்ததோடு பிராவோவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். உனாத்கத் வீசிய கடைசி ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரில் ஜடேஜா ஒரு சிக்ஸரையும் தோனி 3 சிக்ஸர்களையும் விளாச, அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் குவிக்கப்பட்டது. இதையடுத்து 20 ஓவர் முடிவில் 175 ரன்கள் என்ற நல்ல ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்தது சென்னை அணி.

உனாத்கத் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அவருக்கு அதிகமான தொகையை கொடுத்து எடுத்தது ராஜஸ்தான் அணி. அவரது கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து அபாரமாக இன்னிங்ஸை முடித்து வைத்தார். கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளை தொடர்ந்து சிக்ஸர்கள் விளாசினார் தோனி. அந்த வீடியோ இதோ.. 

Follow Us:
Download App:
  • android
  • ios