எப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் பொறுமையாக இருந்து மிஸ்டர் கூல் என்று பெயர் பெற்ற தோனி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடும் கோபமடைந்து தீபக் சாஹரை திட்டினார்.
எப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் பொறுமையாக இருந்து மிஸ்டர் கூல் என்று பெயர் பெற்ற தோனி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடும் கோபமடைந்து தீபக் சாஹரை திட்டினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன் 26 ரன்களில் அஷ்வினிடம் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த டுபிளெசிஸ் மற்றும் ரெய்னா ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் அஷ்வின் வீழ்த்தினார். அதன்பின்னர் தோனியும் ராயுடுவும் இணைந்து மிடில் ஓவர்களில் நிதானமாக ஆடினர். வழக்கம்போலவே டெத் ஓவர்கள் வரை நிதானமாக இருந்த தோனி, கடைசி 2 ஓவர்களில் அடித்து ஆடி ரன்னை உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 160 ரன்கள் எடுத்தது.
161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் மற்றும் மயன்க் அகர்வாலை தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார் ஹர்பஜன் சிங். பவர்பிளேயிலேயே கெய்ல் மற்றும் அகர்வாலை வீழ்த்திவிட்டார். அதன்பின்னர் ராகுலும் சர்ஃபராஸ் கானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனால் 18வது ஓவரில் ராகுலும் 19வது மில்லரும் கடைசி ஓவரில் சர்ஃபராஸும் ஆட்டமிழந்ததால் அந்த அணி 138 ரன்களை மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவை. அந்த சூழலில் 19வது ஓவரை வீசிய தீபக் சாஹர், முதல் இரண்டு பந்துகளை தொடர்ச்சியாக நோ பாலாக வீசினார். அதில் முதல் பந்தில் பவுண்டரியும் இரண்டாவது பந்தில் 2 ரன்களும் எடுக்கப்பட்டன. இரண்டாவது நோ பாலை வீசியதும் கடும் கோபமடைந்த தோனி, தீபக் சாஹரை திட்டியதோடு ஆலோசனையும் வழங்கினார். இக்கட்டான நேரத்தில் பொறுமை காப்பவர் தோனி. ஆனால் தோனியையே கோபப்படுத்திவிட்டார் தீபக் சாஹர். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
