ஐபிஎல் 13வது சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறும் 2வது அணி எது என்பதையும், எஞ்சிய 2 இடங்களில் மற்றொரு அணியையும் தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

2வது இன்னிங்ஸில் பனியால் பந்துவீசுவது கடினமாக இருக்கும் என்பதால், சேஸிங் செய்வதே நல்லது. அந்தவகையில் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்றது டெல்லி அணிக்கு அனுகூலமான விஷயம். இரு அணிகளுக்குமே கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டி மாதிரி என்பதால், இரு அணிகளுமே வெற்றி கட்டாயத்தில் இறங்கும் நிலையில், அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளன. 

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். கூடுதல் பேட்ஸ்மேனாக ரஹானே சேர்க்கப்பட்டுள்ளதால், ஹெட்மயர் நீக்கப்பட்டு, கூடுதல் பவுலிங் ஆப்சனாக டேனியல் சாம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பிரவீன் துபே நீக்கப்பட்டு அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேனியல் சாம்ஸ், அக்ஸர் படேல், அஷ்வின், ரபாடா, நோர்க்யா.

ஆர்சிபி அணியில் குர்கீரத் மன் நீக்கப்பட்டு ஷிவம் துபேவும், சைனிக்கு பதிலாக ஷபாஸ் அஹமதுவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணி:

ஜோஷ் ஃபிலிப், படிக்கல், கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, மோரிஸ், ஷபாஸ் அஹமது, இசுரு உடானா, சிராஜ், சாஹல்.