அபுதாபியில் நடக்கும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் சென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் பிரித்வி ஷா ஆடவில்லை. ஷிம்ரான் ஹெட்மயர் சேர்க்கப்பட்டுள்ளார். ஹெட்மயர் அணிக்குள் வந்துள்ளதால் டேனியல் சாம்ஸ் நீக்கப்பட்டுள்ளார். ஹர்ஷல் படேல் இந்த போட்டியில் ஆடவில்லை. அஷ்வின், அக்ஸர் படேலுடன் கூடுதல் ஸ்பின்னராக பிரவீன் துபே சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

தவான், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், அஷ்வின், பிரவீன் துபே, ரபாடா, நோர்க்யா.

சன்ரைசர்ஸ் அணியில் இன்றைய போட்டியிலும் சஹா ஆடவில்லை. கடைசி சில லீக் போட்டிகளில் சன்ரைசர்ஸுக்கு வெற்றி தேடிக்கொடுத்த சஹா இந்த போட்டியில் ஆடவில்லை. இந்த போட்டியிலும் கடந்த போட்டியில் விக்கெட் கீப்பராக ஆடிய ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி தான் ஆடுகிறார்.

சன்ரைசர்ஸ் அணி;

வார்னர்(கேப்டன்), ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, வில்லியம்சன், கர்க், ஹோல்டர், அப்துல் சமாத், ரஷீத் கான், ஷபாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, நடராஜன்.