Asianet News TamilAsianet News Tamil

DC vs RR: ஆமாங்க அவருதான் ஓபனர்.. டாஸ் போடும்போதே கன்ஃபாம் பண்ண ஸ்மித்.. டெல்லி கேபிடள்ஸ் பேட்டிங்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

delhi capitals win toss opt to bat against rajasthan royals in ipl 2020
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 14, 2020, 7:24 PM IST

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹர்ஷல் படேல் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக துஷார் தேஷ்பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், துஷார் தேஷ்பாண்டே, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.

delhi capitals win toss opt to bat against rajasthan royals in ipl 2020

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஸ்மித், சாம்சன், உத்தப்பா ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏராளமாக இருக்கும் அந்த அணியில், கடந்த போட்டியில் பட்லருடன் ஸ்டோக்ஸ் தொடக்க வீரராக இறங்கியது பெரும் ஆச்சரியமாக இருந்தது. அந்தவகையில், இந்த போட்டியிலும் அவர் தொடக்க வீரராக இறங்குவாரா என்று டாஸ் போடும்போது கேட்டதற்கு, ஆம் என்றார் ஸ்மித். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2வது பேட்டிங் செய்யவுள்ள நிலையில், டாஸின்போதே, ஸ்டோக்ஸின் பேட்டிங் ஆர்டரை உறுதி செய்துவிட்டார் ஸ்மித். ஆனால் ஸ்டோக்ஸ் தொடக்க வீரராகத்தான் இறங்குவாரா என்பதை உறுதியாக சொல்லமுடியாது. ஏனெனில் கேட்டதற்காகக்கூட, ஆம் என்று ஸ்மித் பதில் சொல்லியிருக்கலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), சஞ்சு சாம்சன், ரியான் பராக், ராபின் உத்தப்பா, ராகுல் டெவாட்டியா, ஷ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனாத்கத், கார்த்திக் தியாகி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios