ஐபிஎல் 13வது சீசனின் இறுதி போட்டி துபாயில் நடக்கிறது. இறுதி போட்டியில், 4 முறை மற்றும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸும், முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற  டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் முறையாக கோப்பையை வெல்லும் வெற்றி வேட்கையுடன் களமிறங்கியுள்ள டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சன்ரைசர்ஸுக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் களமிறங்கும் அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகிறது.

டெல்லி கேபிடள்ஸ் அணி;

மார்கஸ் ஸ்டோய்னிஸ், தவான், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், அக்ஸர் படேல், அஷ்வின், ரபாடா, பிரவீன் துபே, நோர்க்யா.

மும்பை இந்தியன்ஸ் அணியில் யாருமே எதிர்பார்த்திராத விதமாக அதிரடி மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் முதன்மை ஸ்பின்னர் ராகுல் சாஹர் நீக்கப்பட்டு, ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸின் இந்த முயற்சி பலனளிக்கிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ஜெயந்த் யாதவ், நேதன் குல்ட்டர்நைல், டிரெண்ட் போல்ட், பும்ரா.