ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன. ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில், அம்பாதி ராயுடு ஆடவில்லை. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக ஆடி சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்த அனுபவ வீரரான ராயுடு, நல்ல ஃபார்மில் இருந்துவரும் நிலையில், அவர் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை.

ராயுடுவுக்கு பதிலாக, அண்மையில் கொரோனாவிலிருந்து மீண்ட 23 வயதான இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆடுகிறார்.

சிஎஸ்கே அணி:

முரளி விஜய், ஷேன் வாட்சன், ஃபாஃப் டுப்ளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, லுங்கி இங்கிடி.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ராபின் உத்தப்பா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), டேவிட் மில்லர், ரியான் பராக், ஷ்ரேயாஸ் கோப்பால், டாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ராகுல் டெவாட்டியா, ஜெய்தேவ் உனாத்கத்.