ஐபிஎல் 12வது சீசன் சென்னையில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதுகின்றன.

இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. 

ஐபிஎல்லில் ஒரு அணியில் ஆடும் லெவனில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறலாம். அனைத்து அணிகளுமே 4 வெளிநாட்டு வீரர்களை கண்டிப்பாக இறக்கும். பெரும்பாலும் சொந்த நாட்டு வீரர்களை விட வெளிநாட்டு வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து இறக்குவது தான் பொதுவாக அனைத்து அணிகளின் இயல்பு.

ஆனால் இந்த போட்டியில் ஆடும் சிஎஸ்கே அணியில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். ஷேன் வாட்சன், இம்ரான் தாஹிர், பிராவோ ஆகிய மூவர் மட்டுமே வெளிநாட்டு வீரர்கள். எஞ்சிய 8 வீரர்களும் இந்திய வீரர்கள்.

ஆர்சிபி அணிக்கு எதிராக களமிறங்கும் சிஎஸ்கே அணி வீரர்கள்:

ஷேன் வாட்சன், ராயுடு, ரெய்னா, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஜடெஜே, பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.