சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடக்கின்றன. இரவு நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 

அதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார். 

பிராவோ காயம் காரணமாக இரண்டு வாரங்களுக்கு ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த போட்டியில் டுபிளெசிஸ் சேர்க்கப்பட்டிருந்தார். தொடக்க வீரர்களாக வாட்சனும் டுபிளெசிஸும் களமிறங்கினர். 

இருவரும் அதிரடியாக தொடங்கி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 56 ரன்களை சேர்த்தனர். வாட்சனை 26 ரன்களில் அஷ்வின் வீழ்த்தினார். வாட்சன் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய டுபிளெசிஸ் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்த மாத்திரத்திலேயே 54 ரன்களில் அஷ்வினின் பந்தில் ஆட்டமிழந்தார். களமிறங்கியது முதலே திணறிய ரெய்னா, அடுத்த பந்திலேயே அஷ்வினிடம் வீழ்ந்தார். 

அதன்பின்னர் தோனியுடன் ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. கடைசி இரண்டு ஓவர்களில் வழக்கம்போல தோனி அதிரடியாக ஆடினார். சாம் கரன் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸரும் இரண்டு பவுண்டரியும் விளாசினார் தோனி. கடைசி ஓவரில் ராயுடு ஒரு சிக்ஸரும் தோனி ஒரு பவுண்டரியும் மட்டுமே அடித்தனர். 20 ஓவர் முடிவில் 160 ரன்களை எடுத்தது சிஎஸ்கே அணி. 

பஞ்சாப் அணிக்கு 161 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. சிஎஸ்கே அணியில் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், ஜடேஜா என தரமான ஸ்பின்னர்கள் உள்ளதால் இது பஞ்சாப் அணிக்கு சவாலான இலக்குதான்.