சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் லுங்கி நிகிடி, காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி, தனது சொந்த காரணங்களுக்காக சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். 

இனிவரும் போட்டிகளில் சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி, இந்த சீசனையும் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. முதல் மூன்று போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. 

சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் லுங்கி நிகிடி, காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி, தனது சொந்த காரணங்களுக்காக சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். சிஎஸ்கே அணியின் முக்கியமான இரு வீரர்களும் விலகிவிட்ட போதிலும், அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல், இருக்கிற வீரர்களை வைத்து தொடர் வெற்றிகளை பெற்றார் கேப்டன் தோனி. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. போட்டிக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, நன்றாகத்தான் தொடங்கினோம். நிறைய கேட்ச்கள் விட்டது உட்பட நிறைய விஷயங்கள் எங்களுக்கு எதிராக ஆகிவிட்டன. அடுத்த போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை பார்க்க வேண்டும். அதை பொறுத்து வீரர்களை தேர்வு செய்ய உள்ளோம். பிராவோவிற்கு காயம். ஏற்கனவே சில வீரர்களுக்கு காயம் என்பதால் அவர்கள் ஆடவில்லை. டேவிட் வில்லி சொந்த காரணங்களுக்காக சீசனிலிருந்து விலகிவிட்டார். லிங்கி நிகிடியும் விலகிவிட்டார். அடுத்த போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை மதிப்பீடு செய்து அதற்கேற்றவாறு அணியில் நல்ல மாற்றங்கள் செய்யப்படும் என்று தோனி தெரிவித்துள்ளார்.