சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் லுங்கி நிகிடி, காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி, தனது சொந்த காரணங்களுக்காக சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி, இந்த சீசனையும் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. முதல் மூன்று போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. 

சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் லுங்கி நிகிடி, காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி, தனது சொந்த காரணங்களுக்காக சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். சிஎஸ்கே அணியின் முக்கியமான இரு வீரர்களும் விலகிவிட்ட போதிலும், அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல், இருக்கிற வீரர்களை வைத்து தொடர் வெற்றிகளை பெற்றார் கேப்டன் தோனி. 

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டர் பிராவோவிற்கு தொடையில் காயம் ஏற்பட்டது. அதனால் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆடமாட்டார் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனால் அடுத்த போட்டிக்கு தயாராகிவிடுவார் என்று எண்ணப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஐபிஎல்லில் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே டேவிட் வில்லி, லுங்கி நிகிடி ஆகிய இருவரும் இல்லாத நிலையில், பிராவோவும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஐபிஎல்லில் இருந்து விலகியிருப்பது சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பின்னடைவாக அமைந்துள்ளது.