Asianet News TamilAsianet News Tamil

உண்மையாவே சொல்றேங்க.. யுவராஜ் 3 சிக்ஸ் அடிச்சதும் நான் அப்படித்தான் நெனச்சேன்!! சாஹல் ஓபன் டாக்

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று நடந்த போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. 
 

chahal reveals his mindset after yuvraj hitting hat trick sixes in his over
Author
India, First Published Mar 29, 2019, 2:41 PM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று நடந்த போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த சீசனில் முதன்முதலில் ஆடும் யுவராஜ் சிங், சாஹலின் பந்தில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார். யுவராஜ் சிங் அவரது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருந்த காலத்தில் அதிகபட்ச விலைக்கு ஐபிஎல்லில் ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் பஞ்சாப் அணியால் கழட்டிவிடப்பட்ட யுவராஜ் சிங்கை இந்த சீசனில் அவரது அடிப்படை விலைக்குக்கூட எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. 

இரண்டாம் கட்ட ஏலத்தில் யுவராஜ் சிங்கின் அடிப்படை விலையான ஒரு கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. கடந்த சீசனில் சரியாக ஆடாத யுவராஜ் சிங், இந்த சீசனை நன்றாகவே தொடங்கியுள்ளார். 

chahal reveals his mindset after yuvraj hitting hat trick sixes in his over

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் அடித்தார். ஆனால் அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பழைய யுவராஜ் சிங்கை நினைவூட்டும் வகையில் ஆடினார். சாஹல் வீசிய 14வது ஓவரில் முதல் மூன்று பந்துகளிலும் சிக்ஸர்கள் விளாசினார். அப்போது ஆர்சிபி அணி அரண்டு நின்றது. ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்ததை அடுத்து, யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த அடுத்த பந்தில் யுவி அவுட்டானார். 

போட்டிக்கு பின்னர் யுவராஜ் சிங் அடித்தது குறித்து பேசிய சாஹல், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், யுவராஜ் முதல் மூன்று பந்துகளிலும் சிக்ஸர்கள் அடித்ததும், எனக்கும் ஸ்டூவர்ட் பிராடின் நிலைதானோ என்று நினைத்தேன். ஆனால் அடுத்த பந்தை கண்டிப்பாக சிறப்பாக வீச வேண்டும் என்ற உறுதியுடன் வீசினே என்று சாஹல் தெரிவித்துள்ளார். 

2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில் அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார் யுவராஜ் சிங். அந்த சம்பவம்தான் தனக்கு நினைவுக்கு வந்ததாக சாஹல் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios