ஐபிஎல் 13வது சீசன் கடந்த மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், சிஎஸ்கே அணியை சேர்ந்த 13 பேர் மற்றும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் என மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, முழு போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமானது. ஐபிஎல் அணிகளும், ரசிகர்களும் முழு போட்டி அட்டவணையை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், ஐபிஎல் 13வது சீசனுக்கான முழு அட்டவணை இன்று வெளியிடப்படும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று ஐபிஎல் 2020 அட்டவணை வெளியிடப்பட்டது. செப்டம்பர் 19ம் தேதி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. ஏற்கனவே திட்டமிட்டபடி, மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவுமே முதல் போட்டியில் மோதுகின்றன.

அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய இடங்களில் ஐபிஎல் நடக்கவுள்ளது. செப்டம்பர் 19 முதல் நவம்பர் 3 வரை லீக் சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன. நவம்பர் 3ல் நடக்கும் கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன.
 
முழு போட்டி அட்டவணை இதோ..