ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இந்த சீசனில் சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட அணியை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்துவருகின்றனர். அந்தவகையில், ஆஷிஸ் நெஹ்ராவும் ஐபிஎல் 13வது சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.

கேஎல் ராகுல் மற்றும் வார்னர் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள நெஹ்ரா, இந்த சீசனின் சிறந்த 3ம் வரிசை வீரராக சூர்யகுமாரையும், மிடில் ஆர்டரில் டிவில்லியர்ஸ் மற்றும் இஷான் கிஷனையும் தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவையும் ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா மற்றும் ஆர்ச்சரையும் ஸ்பின்னர்களாக ரஷீத் கான் மற்றும் சாஹலையும் தேர்வு செய்த நெஹ்ரா, 11வது வீரராக ஷமி, அஷ்வின் ஆகிய இருவரில் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா, கோலி, கெய்ல் போன்ற பெருந்தலைகளுக்கெல்லாம் நெஹ்ராவின் ஆடும் லெவனில் இடம் இல்லை. கோலி இந்த சீசனில் சரியாக ஆடவில்லை என்பதால் அவரை எடுக்கவில்லை

ஆஷிஸ் நெஹ்ரா தேர்வு செய்த ஐபிஎல் 2020ன் சிறந்த லெவன்:

கேஎல் ராகுல், டேவிட் வார்னர், சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ரஷீத் கான், சாஹல், பும்ரா, அஷ்வின்/ஷமி.