ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்த சீசனில் இளம் வீரர்கள் பலர் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். 

இந்த சீசனில் சிறப்பாக ஆடிய பெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார் அஜித் அகார்கர். தனது அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் தவானை தேர்வு செய்துள்ளார். இந்த சீசனில் அதிக ரன்களை(670) குவித்த கேஎல் ராகுலையே தனது அணியில் எடுக்கவில்லை அகார்கர்.

3ம் வரிசையில் இஷான் கிஷன், 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், ஐந்தாம் வரிசையில் டிவில்லியர்ஸ் ஆகியோரை தேர்வு செய்த அகார்கர், ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக ரபாடா, பும்ரா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னர்களாக சாஹல் மற்றும் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்துள்ளார்.

அஜித் அகார்கர் தேர்வு செய்த ஐபிஎல் 2020 சிறந்த லெவன்:

வார்னர், தவான், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ், ஹர்திக் பாண்டியா, ஸ்டோய்னிஸ், ரபாடா, பும்ரா, சாஹல், வருண் சக்கரவர்த்தி.