ஆர்சிபி அணிக்கு இந்த சீசனில் பெரும் ஏமாற்றம் அந்த வீரர் தான்..!
ஆர்சிபி அணிக்கு இந்த சீசனில் பெரும் ஏமாற்றம் ஆரோன் ஃபின்ச் தான் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசனிலாவது முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி அணி, இந்த சீசனிலும் அந்த வாய்ப்பை தவறவிட்டது. இந்த சீசனில் இளம் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடிய நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் அணியில் எடுக்கப்பட்ட ஆரோன் ஃபின்ச், பெரிதாக சோபிக்காமல் ஏமாற்றமளித்தார்.
அதனால் வழக்கம்போலவே கோலி மற்றும் டிவில்லியர்ஸை ஆர்சிபி அதிகமாக சார்ந்திருக்க நேரிட்டது. படிக்கல் நன்றாக ஆடிய நிலையில், ஃபின்ச்சும் சிறப்பாக ஆடியிருந்தால், கோலி மற்றும் டிவில்லியர்ஸ் மீதான அழுத்தமும் நெருக்கடியும் குறைந்திருக்கும்.
ஆர்சிபி அணிக்கு ஃபின்ச் பெரும் ஏமாற்றமாக அமைந்தார் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஃபின்ச் ஆர்சிபி அணிக்கு இந்த சீசனில் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தார். அவருக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்து ஆர்சிபி அணி எடுத்தது. மொயின் அலிக்கெல்லாம் ஆடும் லெவனில் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஆனால் ஃபின்ச் பெரும்பாலும் அனைத்து போட்டிகளிலும் ஆடினார். படிக்கல்லுடன் இணைந்து அவரும் நன்றாக ஆடியிருந்தால், கோலி மற்றும் டிவில்லியர்ஸ் மீதான பொறுப்பும் அழுத்தமும் குறைந்திருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.