2024 மக்களவை தேர்தலில் மைசூரு மன்னர் யதுவீர் வாடியாரை பாஜக களமிறக்கி உள்ளது. 

1994-ம் ஆண்டு சத்யராஜ் – மணிவண்ணன் கூட்டணியில் வெளியான அமைதிப்படை படத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து வெளியான இந்த படத்தில் சத்யராஜ் அமாவாசை எனும் நாகராஜ சோழன் கதாப்பாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ என்று சத்யராஜ் பேசும் வசனமும் பிரபலமானது.

அந்த வகையில் தற்போது 2024 மக்களவை தேர்தலில் இதுபோன்ற ஒரு காட்சியை ரீ க்ரியேட் செய்ய முயற்சிக்கிறது பாஜக. ஆம். மக்களவை தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. அதில் மைசூரு மன்னர் பரம்பரையை சேர்ந்த யதுவீர் கிருஷ்ணதத் சாமராஜ வாடியாரின் பெயரும் அதில் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் முதன்முறையாக தேர்தல் அரசியலில் களமிறங்கி உள்ளார் யதுவீர்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? நியூஸ் 18 மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள்..

கடந்த ஆண்டு புதிய நாடாளுமன்றத்தில் நுழைந்து புகை குப்பிகளை வீசிய நபர்களுக்கு பாஸ் வழங்கிய புகாரில் சிக்கிய பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு பதிலாக இந்த முறை மைசூரு மக்களவை தொகுதியில் வாடியரை களமிறக்கி உள்ளது பாஜக. 

யார் இந்த யதுவீர் ?

32 வயதான யதுவீர் மைசூரின் 25வது மற்றும் கடைசியாக ஆட்சி செய்த ஜெயராமச்சந்திர வாடியாரின் பேரன் ஆவார். யதுவீரின் மாமா ஸ்ரீகாந்ததத்த வாடியாரின் மனைவியான ப்ரோமோதா தேவி வாடியார் யதுவீரை தத்தெடுத்து, வளர்த்தனர். பெங்களூரு வித்யாநிகேதன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த யதுவீர், பின்னர் உயர்கல்விக்காக அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்.

ஆங்கில இலக்கியம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். யதுவீர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும், மேலும் அரச குடும்பம் மிகவும் நற்பெயரைக் கொண்டுள்ளதால், முக்கியத்துவம் வாய்ந்த மைசூரு பகுதியில் இருந்து அவரை நிறுத்த பாஜக முடிவு செய்தது.

விடாமல் குடைச்சல் கொடுக்கும் இபிஎஸ், அண்ணாமலை.. எகிறியடிக்க தயாரான முதல்வர் ஸ்டாலின்.!

வரலாற்றில் ஆர்வமுள்ள யதுவீர் டென்னிஸ் விளையாடுவதோடு குதிரை பந்தய ஆர்வலராகவும் இருக்கிறார். அவர் ராஜஸ்தானின் துங்கர்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த திரிஷிகா குமாரி வாடியாரை மணந்தார். திரிஷிகாவின் தந்தை ஹர்ஷவர்தன் சிங் பாஜக மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர். 

வாடியார் வம்சத்தினர் 1399 முதல் 1947 வரை மைசூரு சமஸ்தானத்தை ஆட்சி செய்தனர். மைசூருவின் கடைசி மன்னர் ஜெயச்சாமராஜேந்திர வாடியார் ஆவார். அவர் 1940 முதல் 1947 வரை மைசூருவை ஆட்சி செய்தார். 1950 இல் இந்தியா குடியரசு ஆகும் வரை அவர் மைசூரின் மன்னராகத் தொடர்ந்தார். ஜெயச்சாமராஜேந்திர வாடியாரின் மூத்த மகளான இளவரசி காயத்ரி தேவியின் பேரன் யதுவீர் வாடியார். யதுவீர் 2015 ஆம் ஆண்டில் மைசூர் அரச குடும்பத்தின் தலைவராக முடிசூட்டப்பட்டார், அவரை வாடியார் வம்சத்தின் 27 வது 'ராஜாவானார் என்பது குறிப்பிடத்தக்கது.