துபாயில் இருந்து இந்தியா வந்த மகள்.. பெட்டிக்குள் 10 கிலோ தக்காளி.. என்னபண்றது அம்மா ஆசைப்பட்டு கேட்டது அதான்!
துபாயை பொருத்தவரை பல இந்தியர்கள் அங்கு வியாபார ரீதியாகவும், பணி நிமித்தமாகவும் சென்று வருகின்றனர்.

இந்தியாவின் தக்காளி விவகாரம் தற்போது துபாய் வரை பரவி உள்ளது என்றால் அது மிகையல்ல. அமீரகத்தில் உள்ள முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று, தற்பொழுது வெளியிட்டுள்ள செய்தியில் ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளது.
துபாயை பொருத்தவரை பல இந்தியர்கள் அங்கு வியாபார ரீதியாகவும், பணி நிமித்தமாகவும் சென்று வருகின்றனர். பலர் அங்கு PR பெற்று வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி துபாயில் இருந்து ஒரு பெண் தனது குழந்தைகளின் கோடைகால விடுமுறையை கொண்டாட இந்தியாவிற்கு புறப்பட்டு உள்ளார்.
குஜராத்தில் 160 கி.மீ. வேகத்தில் சீறி பாய்ந்த சொகுசு கார்; 9 பேர் பரிதாப பலி
ஆனால் அவர் வழக்கமாக பேக் செய்து செல்லும் பொருட்களை தாண்டி இந்த முறை துபாயில் இருந்து அவர் இந்தியா வந்தபொழுது சுமார் 10 கிலோ தக்காளியை ஒரு பெட்டிக்குள் அடைத்து அதை எடுத்துச் சென்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த பெண்ணின் சகோதரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை மிக மிக அதிகமாக உள்ள நிலையில், தனது மகள் துபாயில் இருந்து வரும் பொழுது தக்காளி வாங்கி வருமாறு கூறியுள்ளார் அந்த பெண்ணின் தாய்.
இந்நிலையில் அந்த மகளும் தனது தாயின் ஆசைக்கு இணங்க, சுமார் பத்து கிலோ தக்காளியை அங்கிருந்து பெட்டிகளில் பேக் செய்து தற்பொழுது இந்தியாவிற்கு எடுத்து வந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் பெண்கள் பியூட்டி பார்லர் செல்ல தடை... தாலிபான் அரசு அட்டூழியம்!