Asianet News TamilAsianet News Tamil

ஆப்கானிஸ்தான் பெண்கள் பியூட்டி பார்லர் செல்ல தடை... தாலிபான் அரசு அட்டூழியம்!

தாலிபன் அரசின் உத்தரவால் பியூட்டி பார்லர் நடத்திவந்த ஏராளமான பெண்களின் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

In Afghanistan, Women Protest Ban On Beauty Parlours
Author
First Published Jul 20, 2023, 7:00 PM IST

தாலிபான் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்ள் பியூட்டி பார்லருக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு, அனைத்து அழகு நிலையங்களையும் மூடுவதற்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்திய அந்நாட்டுப் பெண்களை பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டி அடித்தனர்.

ஆகஸ்ட் 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, தாலிபான் அரசாங்கம் பெண்களை உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கவும் பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லவும் தடை விதித்தது. பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்காக வேலை செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் அரசாங்க வேலைகளில் இருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதையெல்லாம் படிக்கக் கூடாது! பிரபலமான ஓரினச்சேர்க்கை நாவலை விற்ற கடைக்கு ரூ.29 லட்சம் அபராதம்!

இந்நிலையில், கடந்த மாதம் வெளியிடப்பட்ட உத்தரவில், நாடு முழுவதும் பெண்களுக்காக நடத்தப்படும் ஆயிரக்கணக்கான பியூட்டி பார்லர்களை மூடுமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் பியூட்டி பார்லர் நடத்திவந்த பெண்களின் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இத்தனை எதிர்த்து பெண்கள் அந்நாட்டின் தலைநகரான காபூலில் போராட்டத்தில் இறங்கினர். ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசை எதிர்த்து இதுபோன்ற பொதுமக்கள் போராட்டம் அரிதாகவே நிகழ்கிறது. நிகழும் போராட்டங்களும் அரசால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுகிறது. இந்நிலையில், பியூட்டி பார்லர் தடைக்கு எதிராக காபூல் நகரில் புதன்கிழமை சுமார் 50 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெகு விரைவிலேயே போராட்டத்தில் இருந்த பெண்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தியும் கலைக்கப்பட்டனர். பின்னர் அந்தப் பெண்கள் போராட்டக் களத்தில் எடுத்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்தனர்.

"இன்று நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்குதான் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தோம். ஆனால் இன்று எங்களிடம் பேசவும், நாங்கள் சொல்வதைக் கேட்கவும் யாரும் வரவில்லை. அவர்கள் எங்களைக் கவனிக்கவே தயாராக இல்லை. சிறிது நேரத்தில் அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தண்ணீரைப் பீய்ச்சி அடித்து எங்களை விரட்டினர்" என போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

35 ஆபாச வீடியோ... 8 மணிநேரம்... பெண்களை படுக்கைக்கு அழைத்த பாஜக தலைவர்! அம்பலப்படுத்திய செய்தி சேனல்!

Follow Us:
Download App:
  • android
  • ios