35 ஆபாச வீடியோ... 8 மணிநேரம்... பெண்களை படுக்கைக்கு அழைத்த பாஜக தலைவர்! அம்பலப்படுத்திய செய்தி சேனல்!

பல பெண்களை படுக்கைக்கு அழைத்த மகாராஷ்டிர மாநில பாஜக துணைத் தலைவரின் 8 மணிநேரம் நீட்டிக்கும் 35 வீடியோக்களை மராத்தி செய்தி சேனல் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

35 videos totalling 8 hours: Mumbai crime branch initiates probe into lewd videos purportedly of former BJP MP Kirit Somaiya

அமலாக்கத்துறை ரெய்டு வரும் என்று மிரட்டி பெண் அரசு அதிகாரிகள் உள்பட பல பெண்களை படுக்கைக்கு அழைத்ததாக மகாராஷ்டிர மாநில பாஜக துணை தலைவர் சோமையாவின் 35 ஆபாச வீடியோக்களை மராத்தி செய்தி சேனல் ஒன்று வெளியிட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான  சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறது. பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராக இருக்கிறார். சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த அஜித் பவார் அணியும் கூட்டணியில் இணைந்துள்ளது. இந்நிலையில், அந்த மாநில பாஜகவின் துணைத் தலைவர் க்ரிதி சோமையாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

மொத்தமாக 8 மணிநேரம் ஓடக்கூடிய 35 வீடியோக்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. அதில் பாஜக மாநில துணைத் தலைவர் சோமையா அரசு பெண் அதிகாரிகள் உள்பட பலரை மிரட்டி தன் ஆசைக்கு இணங்க வைக்க முயற்சிப்பது பதிவாகியுள்ளது.

இரண்டு கூட்டணியும் தலித் விரோதிகள்... 2024ல் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி! மாயாவதி அதிரடி முடிவு

35 videos totalling 8 hours: Mumbai crime branch initiates probe into lewd videos purportedly of former BJP MP Kirit Somaiya

தன் ஆசைக்கு பணியாதவர்களிடம் அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயமுறுத்துவதும் வீடியோக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்த வீடியோக்கள் வெளியானதும் மாநில காங்கிரஸ் தலைவர்களும், சரத் பவார், உத்தவ் சிவசேனா போன்ற தலைவர்களும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பெண் அதிகாரிகள் மட்டுமின்றி, எம்பிக்கள், எம்.எல்.ஏக்களையும் சோமையா இதேபோல அச்சுறுத்தி தன் காம இச்சைக்கு இணங்க வைக்க பார்த்திருக்கிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுகிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியின் மகளிர் பிரிவு சோமையாவை உடனடியாக பாஜக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மும்பை போலீசார் இந்த ஆபாச வீடியோ விவகாரம் பற்றி விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை சட்டப்பேரவையிலும் எழுப்பியதால், பாஜகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், சோமையாவின் வீடியோக்கள் பற்றி விசாரணை நடந்த உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்.

சந்திரயான்-3 பயணம் தோல்வி அடையும்! கன்னட விரிவுரையாளரின் சர்ச்சை பதிவு! விளக்கம் கேட்கும் அரசு

35 videos totalling 8 hours: Mumbai crime branch initiates probe into lewd videos purportedly of former BJP MP Kirit Somaiya

சர்ச்சைக்கு உள்ளான வீடியோக்கள் குறித்து முழுமையாக விசாரணை நடைபெறும் என்றும் இந்த விவகாரத்தில் பாஜக யாரையும் காப்பாற்ற முயலவில்லை என்றும் தேவேந்திர பட்னவிஸ் உறுதி அளிக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்களை போலீசார் விசாரித்து கண்டுபிடிப்பார்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே, ஆபாச வீடியோ விவகாரத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் க்ரிதி சோமையா தேவேந்திர பட்னவிஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தான் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளவே இல்லை என்கிறார்! "ஒரு மராத்தி சேனல் என்னுடைய வீடியோக்களை வெளியிட்டுள்ளது. என்மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அந்த வீடியோக்களை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் பெண்களிடம் ஏதும் தவறாக நடந்துகொள்ளவில்லை" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios