இரண்டு கூட்டணியும் தலித் விரோதிகள்... 2024ல் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி! மாயாவதி அதிரடி முடிவு
பகுஜன் சமாஜ் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி இரண்டில் இணையப் போவதில்லை என்கிறார் மாயாவதி.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்து விலகி நின்றிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, புதன்கிழமை தனது கருத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார். எந்த கூட்டணியும் மத்தியிலோ அல்லது மாநிலங்களிலோ வலுவான அரசாங்கத்தை அமைக்க முடியாது என்றும் அத்தகைய சூழ்நிலையில், வலிமையான அரசாங்கத்திற்கு பதிலாக உதவியற்ற அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
நலிவுற்ற மக்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்த மாயாவதி, மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.
உம்மன் சாண்டியின் கடைசி ஆசை... மனைவி சொன்னதை அப்படியே நிறைவேற்றிய கேரள அரசு!
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள பிராந்தியக் கட்சிகளுடன் தனது கட்சி கூட்டணி வைக்கலாம், ஆனால் இந்த கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அல்லது காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கக்கூடாது எனவும் மாயாவதி கூறினார்.
பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுகளின் நோக்கங்களும் கொள்கைகளும் தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், முஸ்லீம்கள் மற்றும் பிற மதச் சிறுபான்மையினரை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக நடத்துவதாக மாயாவதி குற்றம்சாட்டினார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியிலும் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி விலகி இருக்கிறது என்று குறிப்பிட்ட மாயாவதி, "பாஜக, காங்கிரஸ் இரண்டும் ஏழை மற்றும் நலிந்த பிரிவினரின் நலன் குறித்து தவறான கூற்றுக்களை மட்டுமே கூறிவருகின்றன; அவர்களுக்காக எதுவும் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் மாயாவதி கூறினார்.
சந்திரயான்-3 பயணம் தோல்வி அடையும்! கன்னட விரிவுரையாளரின் சர்ச்சை பதிவு! விளக்கம் கேட்கும் அரசு