சந்திரயான்-3 பயணம் தோல்வி அடையும்! கன்னட விரிவுரையாளரின் சர்ச்சை பதிவு! விளக்கம் கேட்கும் அரசு
'திருப்பதி நாமம்' என்று குறிப்பிட்டு சந்திரயான்-3 விண்கலம் தோல்வி அடையும் என கேலியாக பதிவிட்ட விரிவரையாளர் ஹுலிகுண்டே மூர்த்தியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 பணியை கேலி செய்யும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது தொடர்பாக மல்லேஸ்வரத்தில் உள்ள பல்கலைக்கழக கன்னட விரிவுரையாளருக்கு கர்நாடகா கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தலித் ஆர்வலரும் விரிவுரையாளருமான ஹுலிகுண்டே மூர்த்தி, சந்திரயான்-3 திட்டம் தோல்வியடையும் என்று கன்னடத்தில் ட்விட்டரில் பதிவிட்டார். இஸ்ரோவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-3 பயணம் மீண்டும் தோல்வியடையும் என்று சொல்லியிருக்கும் அவர், "திருப்பதி நாமம்" என்று குறிப்பிட்டு கேலி செய்துள்ளார். இஸ்ரோ சந்திராயன்-3 விண்கலத்தை விண்ணில் ஏவிய ஜூலை 14ஆம் தேதி இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.
“சந்திரயான்-3 குறித்த மூர்த்தியின் சமூக ஊடக பதிவு திங்களன்று எனது கவனத்திற்கு வந்தது. அவர் ஏன் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டார் என்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர் புதன்கிழமை தனது பதிலை தாக்கல் செய்வார். அதன் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுப்போம்'' என்று அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்
சந்திரயான்-3 ஏவப்படுவதற்கு முன்னதாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில், விரிவுரையாளர் மூர்த்தியின் பேச்சுக்கு குறித்து, முன்னாள் கல்வி அமைச்சரும், பாஜக தலைவருமான எஸ். சுரேஷ்குமார், தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதையெல்லாம் படிக்கக் கூடாது! பிரபலமான ஓரினச்சேர்க்கை நாவலை விற்ற கடைக்கு ரூ.29 லட்சம் அபராதம்!
“சந்திரயான் -3 வெற்றிகரமாக ஏவப்பட்டதை நாடு முழுவதும் கொண்டாடும்போது, இந்த விரிவுரையாளர் தனது சமூக ஊடக கணக்கில் அதே நாளில் இந்தப் பதிவை வெளியிட்டிருக்கிறார். இப்படிப்பட்டவர் எப்படி நம் மாணவர்களுக்கு ஊக்கமளிக்க முடியும்? நான் ஹுலிகுண்டே மூர்த்தியிடம் விளக்கம் கேட்க விரும்புகிறேன், மேலும் இதுபோன்ற பொறுப்பற்ற நடத்தையை மீண்டும் செய்யாமல் கவனமாக இருக்குமாறு இந்த விரிவுரையாளரை எச்சரிக்க விரும்புகிறேன்." என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கம் செய்வதை இலக்காகக் கொண்டு சந்திரயான்-3 விண்கலம் கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது. இந்தப் பயணம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தை நிறைவேற்றிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
உம்மன் சாண்டியின் கடைசி ஆசை... மனைவி சொன்னதை அப்படியே நிறைவேற்றிய கேரள அரசு!