ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஆந்திரா மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். உலகின் பணக்கார கடவுளாக அறியப்படும் ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக நகை, பணம் என்று உண்டியலில் செலுத்துகின்றனர். சாதாரண நாட்களிலேயே அதிகமான கூட்டம் காணப்படும் நிலையில் விடுமுறை தினங்களில் பக்தர்கள் கூட்டத்தில் திருப்பதி நிரம்பி வழியும்.

நாளுக்கு நாள் திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடி வரும் நிலையில் திருப்பதியை போன்றே இந்தியாவின் பிற இடங்களிலும் ஏழுமலையான் கோவிலை கட்ட திருமலை தேவஸ்தானம் முடிவெடுத்தது. அதன்படி தமிழகத்தின் கன்னியாகுமரியில் பிரம்மாண்ட வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு அண்மையில் குடமுழுக்கு நடைபெற்றது. அதேபோல தலைநகர் சென்னையிலும் திருமலை தேவஸ்தானம் சார்பாக ஏழுமலையான் கோவில் உருவாக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் தற்போது காஷ்மீரிலும் ஏழுமலையான் கோவில் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கூறியிருக்கும் திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார், காஷ்மீரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பாக ஏழுமலையான் கோவில் கட்ட 7 இடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் நான்கு இடங்களை தேவஸ்தான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தேர்வுசெய்யப்பட்ட இடத்தை உயர்மட்டக்குழு அதிகாரிகள் நேரில் பார்வையிட்ட பிறகு கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கும் என கூறியுள்ளார்.

எவ்வளவு பெரிய நடிகரா இருந்தாலும் சரி.. சட்டத்துக்குள்ள கொண்டு வாங்க..! அன்புமணி ராமதாஸ் அதிரடி..!