சாலை ஓரத்தில் தண்ணீர் குடிக்கும் புலி.. காத்திருந்து சென்ற வாகனங்கள்.. வைரல் வீடியோ..
புலி ஒன்று நெடுஞ்சாலை ஓரத்தில் தண்ணீர் குடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்கள் இல்லாமல் வாழ முடியாத என்ற சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.. வேலை இல்லாத நேரத்தில் பலரும் சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களை பார்ப்பதை பழக்கமாக கொண்டுள்ளனர்.. எனவே சமூக ஊடக உலகத்தில் நாம் கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்களை பார்க்கிறோம்.. அந்த வகையில் விலங்குகளின் வீடியோக்கள், குழந்தைகளின் குறும்புத்தனமான வீடியோக்கள் என பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன..
அப்படி நாம் காணும் வீடியோக்கள் நம்மை சில நேரங்களில் சிரிக்க வைக்கின்றன, சில நேரங்களில் சிந்திக்க வைக்கின்றன.. இன்னும் ஒரு சில வீடியோக்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன.. சில வீடியோக்களை அதிர்ச்சியடைய வைக்கின்றன, சில வீடியோக்கள் சோகத்தை ஏற்படுத்துகின்றன..
அந்த வகையில் புலி ஒன்று நெடுஞ்சாலை ஓரத்தில் தண்ணீர் குடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி பர்வீன் கஸ்வான், உத்தரபிரதேசத்தின் கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் காட்டு வங்கப் புலி தண்ணீர் குடிக்கும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தனது தாகத்தை தணிப்பதைக் காணலாம், புலி தண்ணீர் குடிக்கும் வரை சாலை இருந்த வாகனங்கள் காத்திருப்பதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
இதையும் படிங்க : ஸ்டாலினுக்கு என்னை பார்த்து பயம்! இனி எந்த தேர்தல் வந்தாலும் திமுகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்! இபிஎஸ்.!
இந்த வீடியோவை முதலில் ஐஎஃப்எஸ் அதிகாரி ஆகாஷ் தீப் பாதவான் ட்விட்டரில் வெளியிட்டார். 5 மணி நேரத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த வீடியோ ட்விட்டரில் 60,000 பார்வைகளை பெற்றுள்ளது. சில ட்விட்டர் பயனர்கள் அந்த வீடியோ குறித்து பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், " இந்த புலி மிகவும் மதிக்கப்பட வேண்டும். மக்கள் கத்தாமல் அல்லது ஹாரன் அடிக்காமல் இருப்பதைப் பார்ப்பது நல்லது." என்று தெரிவித்துள்ளார்.
"ஒருவேளை புலிகளுக்கு தங்கள் அருகாமையில் இருந்து சில நீர் ஆதாரங்கள் தேவைப்படலாம்" என்று மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார். "என்ன ஒரு அழகான காட்சி," மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : உயிர்களை காவு வாங்கும் "சைலன்ட் அட்டாக்கின் " அறிகுறிகள் என்ன? எப்படி தடுப்பது?