swamy: Subramanian Swamy: பாஜகவில் தேர்தலே இல்லை: மோடி சொல்றதுதான் : சுப்பிரமணியன் சுவாமி சுளீர் விமர்சனம்
பாஜகவில் தேர்தலே இல்லாமல் போய்விட்டது. முக்கிய பதவிகள், நிர்வாகிகள் நியமனங்கள் மோடியின் அனுமதி பெற்றுதான் நடக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
பாஜகவில் தேர்தலே இல்லாமல் போய்விட்டது. முக்கிய பதவிகள், நிர்வாகிகள் நியமனங்கள் மோடியின் அனுமதி பெற்றுதான் நடக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
பாஜகவில் நேற்று அமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதன்படி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நாடாளுமன்ற ஆட்சிமன்றக் குழுவில் இருந்து நீக்கப்பட்டனர்.
பீகார் அமைச்சரவை விரிவாக்கம்: நிதிஷ் அரசில் 31 அமைச்சர்கள்: ஆர்ஜேடிக்கு அதிகம்
அதற்குப் பதிலாக கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ். எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனாவால் சேர்க்கப்பட்டனர்.
மேலும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இக்பால் சிங் லால்புரா, மக்களவை எம்.பி.சத்தியநாராணன், பாஜக மூத்த தலைவர் லட்சுமணன், சுதா யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்த குழுவில் புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். மத்தியல் ஆளும் மோடி தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேடு, நிதிஅமைச்சகத்தின் செயல்பாடு போன்றவற்றை சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது விமர்சித்து வருவது வழக்கம். அந்த வகையில் நேற்றைய நியமனத்தையும் விளாசியுள்ளார்.
தரமற்ற பிரஷர் குக்கர்கள் விற்பனை: ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு கடும் அபராதம் விதித்த சிசிபிஏ
சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ ஆரம்பகாலகட்ட ஜனதா கட்சி அதன்பின் பாஜகவில் கட்சியில் உள்ள நிர்வாக ரீதியான இடங்களை நிரப்புவதற்கு நாடாளுமன்றக்குழுத் தேர்தல் நடத்தப்படும். அதன்படி நியமனங்கள் நடக்கும்.
மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போறேன்’: நெட்டிஸன்களை குழப்பிய எலான் மஸ்க்
கட்சியின் அரசியலமைப்புக்கு இது தேவையானது. ஆனால் இன்று பாஜகவில் எப்போதுமே தேர்தல் என்பதே கிடையாது. ஒவ்வொரு பதவிக்கும் மோடியின் ஒப்புதலுடன் ஒருவர் நியமிக்கப்படுகிறார்” என விமர்சித்துள்ளார்.