வரும் நாட்களில் 3 - 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும்.. குட்நியூஸ் சொன்ன இந்திய வானிலை மையம்...

அடுத்த சில நாட்களில் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் வெப்ப அலையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

The temperature will decrease in the coming days.. India Meteorological Center said good news...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் வெப்ப அலையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. நாளை (ஏப்ரல் 22) முதல் கிழக்கு இந்தியாவில் வெப்ப அலை நிலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வடகிழக்கு இந்தியாவில்அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.. 

அடுத்த 5 நாட்களில் கிழக்கு இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வடமேற்கு இந்தியாவில் அடுத்த 3 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.. அதன் பிறகு 2  முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும், அடுத்த 5 நாட்களுக்கு மத்திய இந்தியாவின் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்தியாவின் மேற்குப் பகுதியில், அடுத்த இரண்டு நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரும் என்றும், வடமேற்கு, வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியா உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு இமயமலைப் பகுதியில் லேசான/மிதமான மழை பெய்யும் என்றும், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை/மின்னல் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் உத்தரகாண்டில் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட ஆலங்கட்டி மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3  நாட்களுக்கு வடகிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்யும். ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயாவில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது... அடுத்த 5 நாட்களில் மத்தியப் பிரதேசம், விதர்பா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய லேசான/மிதமான  மழை பெய்யக்கூடும். 

பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் ஒடிசாவிலும், ஏப்ரல் 24 ஆம் தேதி பீகாரிலும்  ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும். அடுத்த 5 நாட்களில் தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராயலசீமா மற்றும் உள் கர்நாடகா உட்பட இந்தியாவின் தென் மாநிலங்களிலும் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க : நீட் தேர்வுக்கு எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் தெரியுமா..? ஆண்களை விட பெண்களே அதிகம்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios