நீட் தேர்வுக்கு எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் தெரியுமா..? ஆண்களை விட பெண்களே அதிகம்..

நடப்பாண்டு நீட் இளங்கலை தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

Do you know how many lakhs of people have applied for NEET exam..? More women than men..

நீட் இளங்கலை தேர்வு என்பது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், நர்சிங் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும். அதன்படி நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் நடப்பாண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு, மே 7 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இத்தேர்வுக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி நாட்டிலேயே மிகப்பெரிய நுழைவுத் தேர்வாக கருதப்படும் நீட் தேர்வுக்கு (NEET UG), இந்த ஆண்டு 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.. இது முந்தைய ஆண்டை விட 2.57 லட்சத்திற்கும் அதிகமாகும். குறிப்பாக இந்த ஆண்டு, மொத்தம், 11.8 லட்சம் பெண் விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். ஆண் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை விட இது  2.8 லட்சம் அதிகமாகும். நீட் இளங்கலை தேர்வுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்..  அதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம். மாநிலத்தில் அதிகபட்ச பதிவு உள்ளது..

NEET UG தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பாடங்கள் இருக்கும். ஒவ்வொரு பாடத்திலும் 50 பல தேர்வு கேள்விகள் இரண்டு பிரிவுகளாக (A மற்றும் B) பிரிக்கப்படும். தேர்வின் காலம் மதியம் 2:00 முதல் மாலை 5:20 வரை அதாவத 200 நிமிடங்கள் இருக்கும். இத்தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும், மேலும் இது ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படும்..

மதிப்பெண் திட்டத்தின்படி, ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்களும், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மூன்று மதிப்பெண்களும் கழிக்கப்படும். பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு பூஜ்ஜிய மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்கள் சரியாக இருந்தால், இரண்டு விருப்பங்களுக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 17 ஆண்டுகள் ஆகும், மேலும் எந்த வகை விண்ணப்பதாரர்களுக்கும் அதிக வயது வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க : தெற்காசியாவின் முதல் நீர்வழி மெட்ரோ சேவை... பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios