ஆட்சிக்கு வந்த பிறகு சிவசேனா கட்சியை கைப்பற்ற ஷிண்டேவின் தலைமை முயற்சித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து கடந்த 30-ம் தேதி மாநிலத்தில் புதிய அரசை அமைத்தன. சட்டப்பேரவை பேரவைத் தலைவர் தேர்வு நடந்தது. இதில் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

மேலும் செய்திகளுக்கு.. "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை

எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட ராஜன் சால்விக்கு 107 வாக்குகள் கிடைத்தன. ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சி அமைக்க அழைத்த மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷாரியின் முடிவுக்கு எதிராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தாக்கரே பிரிவுத் தலைவர் சுபாஷ் தேசாய் திங்களன்று சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கேள்வி எழுப்பினார். 

தகுதி நீக்க வழக்கை எதிர்கொண்டுள்ள 16 எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றிருக்கக் கூடாது என்பது தாக்கரேவின் வாதம். மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடிக்கு பிறகு ஜூன் 30ஆம் தேதி முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். நான்கு நாட்களுக்குப் பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பில் 288 வாக்குகளில் 164 வாக்குகள் பெற்று ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றார்.

மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ்சை தே* என்று அவர் திட்டினார்.. எடப்பாடி பழனிசாமி ரசித்தார் - மருது அழகுராஜ் கொடுத்த அதிர்ச்சி

எதிர்க்கட்சிக்கு 99 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆட்சிக்கு வந்த பிறகு சிவசேனா கட்சியை கைப்பற்ற ஷிண்டேவின் தலைமை முயற்சித்து வருகிறது. 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே பரிசீலனையில் உள்ளது. இந்த வழக்குகளை நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்க இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவை அழிக்க பார்க்கும் 3 நபர்கள்.. ஓபிஎஸ் போட்ட டீல்.! அதிமுக பிரமுகர் வெளியிட்டசீக்ரெட்