தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வயிற்று வலி காரணமாக அவதிபட்டு வந்துள்ளார். இதை அடுத்து அவர் கச்சிபௌலியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் வயிற்றில் புண் இருப்பதை கண்டறிந்தனர். இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் சந்திரசேகர் ராவ் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அமைச்சர் கூறிய சுவாரஸ்யமான விஷயம்... டிவிட்டரில் பகிர்ந்த பிரதமர் மோடி!!

அதில், முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு இன்று (12.03.2023) காலை வயிற்று வலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவர் நாகேஷ்வர் ரெட்டி அவரை பரிசோதித்தார். அவர் AIG மருத்துவமனைக்கு கொண்டு வரபட்டு CT ஸ்கேனும் எண்டோஸ்கோபியும் செய்யப்பட்டது. அதில், அவரின் வயிற்றில் ஒரு சிறிய புண் கண்டறியப்பட்டது.

இதையும் படிங்க: போதைக்கு அடிமையானவரை தலைகீழாக நிறுத்தி அடித்துக் கொன்ற கொடூரம்!

அதற்கு மருத்துவ ரீதியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மற்ற உடல் அளவுருக்கள் இயல்பாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என கூறப்ப்டுகிறது. இதனிடையே தெலுங்கானா முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.