போதைக்கு அடிமையானவரை தலைகீழாக நிறுத்தி அடித்துக் கொன்ற கொடூரம்!
போதை ஒழிப்பு மையத்தில் சிகிச்சை பெற வந்தவரை அங்கிருந்த மேலாளரும் வேறு சிலரும் சேர்ந்து பிளாஸ்டிக் குழாயால் அடித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர்.
போதை ஒழிப்பு மையத்தில் சிகிச்சை பெற வந்தவரை சுமார் ஒன்றரை மணிநேரமாக விடாமல் அடித்தே கொன்ற கொடூர சம்பவம் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
குஜராத்தில் மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்திக் சுதர் என்பவர் மரணம் கடந்த மாதம் இயற்கையானது என தெரிவிக்கப்பட்டது, ஆனால் போலீசார் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த பின்பு அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று கண்டுபிடித்தனர். அந்த சிசிடிவி காட்சிகளில் சுதாரை சிலர் பிளாஸ்டிக் குழாயால் ஆவேசத்துடன் தாக்குகின்றனர். இரண்டு பேர் அவர் தனது கை கால்களை அசைக்க முடியாதபடி இறுக்கிப் பிடித்தபடி இருக்கின்றனர்.
என்னை குழி தோண்டி புதைப்பதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது: பிரதமர் மோடி
சுதர் ஆறு மாதங்களுக்கு முன்பு சூரத்தில் உள்ள அறக்கட்டளையால் நடத்தப்படும் ஜியோனா போதை ஒழிப்பு மையத்தில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி 17ஆம் தேதி அங்கு உள்ள குளியலறைக்குச் சென்ற சுதர் தனது மணிக்கட்டை வெட்ட முயன்றிருக்கிறார். அப்போது மேலாளர் சந்தீப் படேல் இன்னும ஏழெட்டு பேருடன் அங்கு வந்திருக்கிறார். சுதரை குளியறையில் இருந்து அழைத்து வந்து கைகளையும் கால்களையும் கட்டி, தடிமனான பிளாஸ்டிக் குழாயை வைத்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கொடூரமாக தாக்கியுள்ளனர்” என்று வழக்கை விசாரித்து வரும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மெஹுல் படேல் கூறுகிறார்.
"இரண்டு பேர் பிளாஸ்டிக் குழாயின் ஒரு பகுதியை லைட்டர் நெருப்பில் காட்டி உருக்கி, அந்த சூடான திரவத்தை சுதாரின் அந்தரங்க உறுப்பில் உள்ள முடியில் ஊற்றியுள்ளனர்" என்றும் அவர் தெரிவிக்கிறார். சுதார் தாக்கப்பட்டபோது மையத்தில் உள்ள மற்ற நோயாளிகள் ஏதாவது தவறு செய்தாலும் இதேபோல தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டதாகவும் மெஹுல் படேல் சொல்கிறார்.
தாக்கியவர்கள் சுதர் இயற்கையாகவே மரணம் அடைந்தார் என்று கூறி அவரது உடலை தகனம் செய்துவிட்டனர். மேலாளர் சந்தீப் படேலுடன் அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் 7 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Dogs vs Bikes: பைக்கில் செல்பவர்களை நாய்கள் துரத்துவது ஏன்?