ஆஸ்திரேலிய அமைச்சர் கூறிய சுவாரஸ்யமான விஷயம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உள்ள பெரிய கலாச்சார உறவை வலியுறுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அமைச்சர் கூறிய சுவாரஸ்யமான விஷயம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உள்ள பெரிய கலாச்சார உறவை வலியுறுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனியுடன் நடந்த இரவு விருந்தில், ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டான் ஃபாரெல் பிரதமர் மோடியுடன் ஒரு சுவாரஸ்யமான கதையைப் பகிர்ந்து கொண்டார். இதுக்குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: என்னை குழி தோண்டி புதைப்பதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது: பிரதமர் மோடி

அதில், 1 ஆம் வகுப்பில் தனக்குக் கற்பித்த ஆசிரியர் ஈபர்ட் பற்றி அமைச்சர் டான் ஃபாரல் பேசினார். ஈபர்ட் தனது வாழ்க்கையில் எவ்வாறு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார் மற்றும் அவரது கல்விக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்தார் என்பதை அவர் பகிர்ந்து கொண்டார். ஈபர்ட் & அவரது கணவர் மற்றும் அவர்களது மகள் லியோனி, 1950களில் கோவாவிலிருந்து அடிலெய்டுக்கு குடிபெயர்ந்து, ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றத் தொடங்கினார்கள்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் ராஜா ராணி போட்டியும் கர்நாடக தேர்தல் வியூகங்களும்

During the lunch in honour of my friend PM @AlboMP, the Australian Trade and Tourism Minister Don Farrell shared something interesting…he was taught by one Mrs. Ebert in Grade 1 who left a deep impact on his life and credits her for his educational grounding. pic.twitter.com/l0dKJbFCbZ

— Narendra Modi (@narendramodi) March 12, 2023

மகள் லியோனி தெற்கு ஆஸ்திரேலிய ஆசிரியர் கழகத்தின் தலைவரானார். இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான வளமான கலாச்சார உறவை வலியுறுத்தும் இந்த உரையைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். யாரோ ஒருவர் தங்கள் ஆசிரியரை அன்புடன் குறிப்பிடும்போது அது இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக உணர்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.