Asianet News TamilAsianet News Tamil

புத்தாண்டிலிருந்து கேஸ் சிலிண்டருக்கு ரூபாய் வாங்க மாட்டாங்களாம்..!!

swiping machine-for-gas-cylinder
Author
First Published Dec 22, 2016, 6:55 AM IST


“ஸ்வைப்பிங் மெஷினில்” கியாஸ் கட்டணம்

புத்தாண்டு முதல் அமல்…. தயாராக இருங்கள் மக்களே…

2017ம் ஆண்டு, ஜனவரி 1-ந்தேதி முதல் சமையல் கியாஸ் கட்டணத்தை ஸ்வைப்பிங் மெஷினில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக அனைத்து நிறுவன கியாஸ் முகவர்களும் ஸ்வைப் மெஷின் வாங்கக்கூறி பெட்ரோலியம் எண்ணெய் எரிவாயு அமைச்சகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது. ஜனவரி 1-ந்தேதி முதல் வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்ய வரும் அனைத்து நபர்களும் தங்களுடன் ஸ்வைப்பிங் மெஷினை எடுத்து வருவார்கள். அவர்களிடம் நாம் கார்டுகள்  மூலம் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ரூபாய் நோட்டு அறிவிப்பையடுத்து வங்கி, ஏ.டி.எம்.களில் மக்கள் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் அத்தியாவசியத் தேவைக்குபணம் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.நாட்டிலும் பணத்தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், மத்தியஅரசு மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் பொதுத்துறை நிறுவனங்களையும் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற்றி வருகிறது.அதன் வெளிப்பாடாகவே, கியாஸ் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்துவதாகும்.

இது குறித்து “இன்டேன் கியாஸ்” நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மத்தியஅரசின் உத்தரவுப்படி, பணமற்ற பொருளாதாரத்தை கொண்டு வர அனைத்து வரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். அதன் நடவடிக்கையாக, அனைத்து கியாஸ் சிலிண்டர்சப்ளை செய்யும் நபர்களுக்கும் “ஸ்வைப்பிங் மெஷின்” தரப்பட உள்ளது.

2017-ம்ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அனைத்து முகவர்களுக்கும் ஸ்வைப்பிங் மெஷின் வழங்கப்படும். இதற்கான ஆர்டர்கள், கணக்கு வைத்துள்ள வங்கிகள் வாயிலாக அளிக்கப்பட்டுவிட்டது.

இந்த மெஷின்களை வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளை செய்யும் நபர்களிடம் கொடுக்கப்படும். அவர்களிடம் கியாஸ் கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்கள் செலுத்தலாம்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கியாஸ் கட்டணத்தை டிஜிட்டல் முறையல் செலுத்த அனைத்து மக்களையும் அரசு தயார் செய்து வருகிறது..

Follow Us:
Download App:
  • android
  • ios