சிவசேனா கட்சி விவகாரம்… உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!!
சிவசேனா கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சிவசேனா கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா பிளவுபட்டுள்ளது. இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா எனக்கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளன.
இதையும் படிங்க: “Boy Friends வாடகைக்கு கிடைக்கும்.. Love Failure பெண்களுக்கு மட்டும்” - பெங்களுருவில் வினோத சம்பவம்!
இதற்கிடையில் தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் முடிவு எட்டும் வரை கட்சியின் சின்னம் யாருக்கும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யக்கூடாது என்று கோரி உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே மனு தாக்கல் செய்து இருந்தார். இதுத்தொடர்பான மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
இதையும் படிங்க: பாஸ்போர்டுக்கு ‘போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட்’! நாளை முதல் புதிய முறை தொடக்கம்
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இந்த முடிவு ஏக்நாத் ஷிண்டேவுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம், ஏக்நாத் ஷிண்டே மற்றும் 39 எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது. ஜூன் 30 ஆம் தேதி, பாஜக ஆதரவுடன் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.