பாஸ்போர்ட்டுக்கு ‘போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட்’! நாளை முதல் புதிய முறை தொடக்கம்
பாஸ்போர்ட்டுக்கு போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட் பெறுவதற்கு இனிமேல் அலையத் தேவையில்லை, அஞ்சலகத்தின் பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் விண்ணப்பிக்கலாம். இந்த முறை நாளை(28ம்தேதி) முதல் தொடங்கப்படுகிறது.
பாஸ்போர்ட்டுக்கு போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட் பெறுவதற்கு இனிமேல் அலையத் தேவையில்லை, அஞ்சலகத்தின் பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் விண்ணப்பிக்கலாம். இந்த முறை நாளை(28ம்தேதி) முதல் தொடங்கப்படுகிறது.
இதன்படி, அனைத்து ஆன்-லைன் போஸ்ட் ஆபிஸ் பாஸ்போர்ட் சேவா கேந்திரா(பிஓபிஎஸ்கே) மூலம் போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட்டுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாங்குக்கூடியவிலைதான்! ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் விலை தெரியுமா?
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ இந்த வசதி மூலம் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் பெறுவதற்கு முன்கூட்டியே ஸ்லாட் முன்பதிவு செய்துவிட முடியும். எதிர்பாராதவிதமாக அதிகமானோர் விண்ணப்பிக்கும்பது ஏற்படும் குழப்பங்களைத் தீர்த்து பட்டியலிட்டு வழங்கிட முடியும்” எனத் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு எதிரான வழக்கு: கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி
கொரோனா காலத்தில் ஏராளமான இந்தியர்கள் வெளிநாட்டிலிருந்து பணியிலிருந்து விலகி அல்லது நீண்டவிடுப்பு காரணமாகவோ தாயகம் திரும்பிவிட்டனர். அவர்கள் மீண்டும் வெளிநாடுசெல்லும்போது போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட் தேவை.
ஒட்டுமொத்தமாக விண்ணிப்பிக்கும்போது சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் அதைத் தவிர்க்கவே இந்த ஆன்லைன் முன்பதிவு முறையாகும்.
அதுமட்டுமல்லாமல் மீண்டும் வேலைகிடைத்து வெளிநாடு செல்பவர்களுக்கு போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் முக்கியமாகும். கல்வி, நீண்டகால விசா, குடியேற்றம் ஆகியவற்றுக்கும் பிசிசி சான்று அவசியம். அதற்காகவே ஆன்லைன் முன்பதிவு முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி 29,30 தேதிகளில் குஜராத் பயணம்: பலஆயிரம் கோடி முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல்
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குடியிருப்பு நிலை, வேலைவாய்ப்பு அல்லது நீண்ட கால விசா அல்லது குடியேற்றத்திற்கு விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு பிசிசி சான்றிதழ் வழங்கப்படும்.