reliance jio 5g launch:வாங்குக்கூடியவிலைதான்! ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் விலை தெரியுமா?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தின் சார்பில் இன்னும் விலை அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும், அதுகுறித்து தி எக்னாமிக் டைம்ஸ் நாளேடு தோராயமாக விலையை வெளியியிட்டுள்ளது.
அக்டோபர் 1ம் தேதி நாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் விலை, ரூ.8ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரத்துக்குள் இருக்கலாம் எனத் தெரிகிறது.
Telegram Update : அடேய் WhatsApp, அங்க பாருடா.. Telegram பாத்து கத்துக்கோடா!!
4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரை ஈர்க்கவும், எளிதாக மக்கள் வாங்கும் விலையில் இருக்க வேண்டும் என்பதாக இந்த விலையில் ஜியோ நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிடும் எனத் தெரிகிறது
இது குறித்து எக்னாமிக் டைம்ஸ்நாளேடு வெளியிட்ட செய்தியில் “ 2ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தியவர்களை எவ்வாறு ஈர்த்து விலை குறைவாக நிர்ணயித்து 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க வைக்கப்பட்டதோ அதே முயற்சிதான் 5ஜி ஸ்மார்ட்போனுக்கும் பயன்படுத்தப்படும்.
சென்னையில் ஐ-போன்14 தயாரிப்பைத் தொடங்கியது ஆப்பிள் நிறுவனம்
4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்திவரும் பெரும்பகுதி மக்களை 5ஜிக்கு மாற வைக்கும் வகைக்கும் நோக்கில் ஸ்மார்ட்போன் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் 5ஜி-யில் முதலிடத்தைப்பிடிக்கும் நோக்கில் இந்த சலுகை அறிவிக்கப்படலாம்”எனத் தெரிவிக்கப்பட்டது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, “ 5ஜி சேவையை முதல்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தீபாவளிப் பண்டிகைக்குள் அறிமுகம் செய்வோம். 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும்.
ஆன்லைனில் இலவசமாக படம் பார்க்க வேண்டுமா? இதோ 6 நேர்மையான வழிகள்!
5ஜி ஸ்மார்ட்போனை கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிடுகிறது. ஆனால் இதுவரை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பில் இதுவரை விலை வெளியிடப்படவில்லை.