Asianet News TamilAsianet News Tamil

foxconn india: iphone 14 india manufacturing: சென்னையில் ஐ-போன்14 தயாரிப்பைத் தொடங்கியது ஆப்பிள் நிறுவனம்

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன்-14 தயாரிப்பை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Apple begins producing the iPhone 14 in india at chennai plant
Author
First Published Sep 26, 2022, 2:02 PM IST

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன்-14 தயாரிப்பை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 16ம் தேதி உலகளவில் ஐபோன்-14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதன் அசெம்பிள் அனைத்தும் சென்னை ஆலையில் முடிக்கப்பட்டு, உள்நாட்டுக்கும், வெளிநாட்டுக்கும் சப்ளை செய்யப்படுகிறது.

மயங்கி விழாதிங்க!திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சொத்து மதிப்பு என்ன? வெளியானது உண்மை தகவல்

Apple begins producing the iPhone 14 in india at chennai plant
சீனாவில் ஐபோன்-14 தயாரிக்கப்பட்டிருந்தால் இறக்குமதியாகும்போது அதற்கான இறக்குமதி,சுங்கவரி செலுத்த வேண்டும். இதனால் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பணம் செலுத்த வேண்டியதிருக்கும். 
ஆனால், இந்தியாவிலேயே ஐபோன்-14 தயாரிக்கப்பட்டு, அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதால், உள்நாட்டில் ஐபோன்-14 விலை குறையும்.


ஆனால், ஐபோன்-14 விலைக் குறைப்பு உடனடியாக இருக்காது என்றும், அதற்கு சில காலாண்டுகள் வரை ஆகும் என்று ஆப்பிள் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கத்தின் விலையில் இப்படிஒரு மாற்றமா! இவ்வளவுதான் உயர்வா! இன்றைய நிலவரம் என்ன?
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “ இந்தியாவில் ஐபோன்-14 உற்பத்தியை தொடங்க இருக்கிறோம். புதிய மாடல் ஐபோன் புதிய தொழில்நுட்பங்களையும், அதிகமான பாதுகாப்பு அம்சங்களையும் தாங்கிஇருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

Apple begins producing the iPhone 14 in india at chennai plant
இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு ஆப்பிள் நிறுவனம் 26 சதவீதம் வரி செலுத்தும், ஆனால், தற்போது 4 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்தினால் போதுமானது. 


ஏனென்றால், 18சதவீதத்தை மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு செலுத்திவிட்டது. வரிக் குறைப்பு மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வரும் மாதங்களில் குறைந்த விலையில் ஐபோன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

ஆப்பிள் ஐபோனுக்கு வரலாறு காணாத தள்ளுபடி?
ஐபோன்-14 விலை எவ்வளவு குறையும் என்று தெரிவிக்க ஆப்பிள் செய்தித்தொடர்பாளர் மறுத்துவிட்டார். ஆனால் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்துப்படி ஐபோன்-14 விலை சர்வதேச விலையில் இருந்து 17 முதல் 20 சதவீதம் வரை இந்தியாவில் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Apple begins producing the iPhone 14 in india at chennai plant


இந்தியாவில் இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் இரு மாடல் போன்கள் தயாரிக்கப்பட்டு, அசெம்பிள் செய்யப்பட்டுள்ளன. 


ஐபோன்-14க்கு முன்பாக ஐபோன்-13 மொபைல்போன் ஏப்ரல் 13ம்தேதி அசெம்பிள் செய்யும் பணி தொடங்கியது. 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன்-13 அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் அசெம்பிள் செய்யும் பணி தொடங்கியது. அடுத்த 5 மாதங்களில் ஐபோன்-14 மொபைல் போன் அசெம்பிள் செய்யப்படுகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios