அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் தற்போதைய இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா செப்டம்பர் 15ஆம் தேதி வரை பதவியில் இருக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அமலாக்க இயக்குநரகத்தின் தற்போதைய இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் இன்னும் நான்கு நாட்களில், அதாவது ஜூலை 31ஆம் தேதியுடன் முடிகிறது. அவரது பதவிக் காலத்தை அக்டோபர் 15ஆம் தேதி வரை நீடிக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.கே. மிஸ்ராவின் பதவிக்காலத்தை செப்டம்பர் 15ஆம் தேதி வரை மட்டும் நீட்டிக்க அனுமதித்துள்ளது. செப்ம்பர் 15ஆம் தேதிக்குப் பின் எந்தக் காரணத்தைக் கொண்டு அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க முடியாது என்றும் இனி இது தொடர்பாக யார் மனுத்தாக்கல் செய்தாலும் அதனை விசாரணைக்குக்கூட ஏற்க மாட்டோம் என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவிகள்; பரபரப்பான சிசிடிவி காட்சிகள்
நீதிபதிகள் பிஆர் கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கவாய், "இது துறை முழுவதும் திறமையற்றவர்களால் நிரம்பியிருப்பது போலவும், ஒரே ஒரு திறமையானவர் மட்டுமே இருப்பது போலவும் சித்தரிப்பதில்லையா? ஒருவர் இல்லையென்றால் வேலை செய்ய முடியாது என்பது ஒட்டுமொத்த துறைக்கும் மனஉளைச்சல் கொடுக்கும் அல்லவா?" என்று சரிமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, யாரும் இன்றியமையாதவர்கள் என்பதல்ல என்றும் ஆனால் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) குழு இந்தியாவுக்கு வரவுள்ளதால் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்காவிட்டால் இந்தியா மீது எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்படக்கூடும் என்று கூறினார்.
இந்த வாதங்களை கருத்தில் கொண்டு, உத்தரவு வழங்கிய நீதிபதி கவாய், அவரது பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்த போதிலும், ஜூலை 31 வரை அவரைத் தொடர அனுமதிக்கப்பட்டது சுட்டிக்காட்டினார். செப்டம்பர் 15ஆம் தேதிக்கு மேல் ஒருநாள் கூட அவர் பதவியில் இருக்க முடியாது என்றுத் தெரிவித்துள்ளார்.
இங்க பேச மாட்டாரு; ஆனா அங்க பேசுவாரு: மோடியை விளாசிய கார்கே!
1984ஆம் ஆண்டு பேட்ச் இந்திய வருவாய்த்துறை அதிகாரியான எஸ்.கே.மிஸ்ராவை 2018ஆம் ஆண்டு முதல் அமலாக்கதுதறை இயக்குநர் பதவியில் இருக்கிறார். முதலில் அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகளாக நிர்யணம் செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்த 2021, 2022ஆம் ஆண்டுகளில் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்படி ஜூலை 31ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிகிறது. ஆனால், அதற்குள் மத்திய அரசு அவருக்கு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பிரசாந்த பூஷன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சென்ற ஜூலை 11ஆம் தேதி அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறியது. மேலும், எஸ்.கே. மிஸ்ரா ஜூலை 31, 2023 வரை மட்டுமே அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் நீடிக்கலாம் எனவும் தெரிவித்தது.
மாநிலங்களவையில் நிறைவேறும் டெல்லி அவசரச் சட்டம்: ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆதரவு!
Last Updated Jul 27, 2023, 4:58 PM IST