நான்கு மாநில தேர்தல் முடிவுகள் 2023: இந்தி பெல்டில் பறக்கும் காவி கொடி! தெலுங்கானாவில் காங். ஆறுதல் வெற்றி!

வெற்றியின் மூலம் பாஜக தனித்து ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 12ஆக உயர்கிறது. அதே நேரத்தில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் தோல்வியடைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த எண்ணிக்கை 3 ஆகக் குறைகிறது.

State Election Results 2023 round-up: BJP sweeps MP, Rajasthan, Chhattisgarh; Congress gets Telangana sgb

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியைப் பிடிக்கத் தயாராக உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.

இந்த வெற்றியின் மூலம் பாஜக தனித்து ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 12ஆக உயர்கிறது. அதே நேரத்தில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் தோல்வியடைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த எண்ணிக்கை 3 ஆகக் குறைகிறது.

மத்தியப் பிரதேச தேர்தல் முடிவுகள்:

நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி, பாஜக 161 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு 116 தொகுதிகளை தேவையான நிலையில், பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கத் தயாராக உள்ளது. காங்கிரஸ் 67 இடங்களுடன் பின்தங்கி இருக்கிறது.

இந்நிலையில் அந்த மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான், “நமது பிரதமர் மோடி மத்திய பிரதேச மக்களின் இதயங்களில் இருக்கிறார். மோடியின் இதயத்திலும் இந்த மாநிலம் உள்ளது” என்று கூறியுள்ளார். மாநிலத்தில் 18 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் 2023.. எல்லாம் பிரதமரின் ஆசி.. மத்திய பிரதேசத்தில் முழு பெரும்பான்மை - சிவராஜ் சவுகான் உருக்கம்!

விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இளைஞர்களின் நலனுக்கான திட்டங்களை பாஜக செயல்படுத்தியதே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் சவுகான் எடுத்துரைத்தார்.

ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள்:

ராஜஸ்தானிலும் பாஜக அமோக வெற்றிக்குத் தயாராகி வருகிறது. இதன் மூலம் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி காலி செய்யப்படுகிறது. அந்த மாநிலத்தில் வரலாற்று ரீதியாக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கும் போக்கு இந்த தேர்தல் முடிவிலும் பிரதிபலித்துள்ளது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி, பாஜக 115 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 69 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளரின் மரணம் காரணமாக வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 199 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ராஜஸ்தானில் இன்னொரு யோகி! முதல்வர் பதவியைக் குறிவைக்கும் பாபா பாலக்நாத்!

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான உட்கட்சி பூசல் தேர்தலுக்கு முன் சமரசம் அடைந்தாலும், அது தேர்தலில் பலன் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் இந்த மாநிலத்திலும் பாஜகவுக்கு முதல்வர் யார் தெரியவில்லை. பாஜகவில் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே முதல் பதவிக்கான ரேஸில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மிக விரைவில் சுமூகமாக முறையில் ராஜஸ்தானின் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜகவின் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகள் 2023

பல்வேறு கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் சத்தீஸ்கரில் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அந்ந மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் தலைகீழாக உள்ளன. பிற்பகல் 3 மணி நிலவரப்படி பாஜக 54 இடங்களிலும், காங்கிரஸ் 33 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

ராய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ராமன் சிங், மக்கள் முதல்வர் பூபேஷ் பாகேலை நிராகரித்துவிட்டது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். பாகேலின் உறுதிமொழிகளைக் காட்டிலும், பிரதமர் மோடியின் பணி மற்றும் உறுதிமொழிகள் மீது சத்தீஸ்கர் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தலைகீழாக மாறிய சத்தீஸ்கர் களம்.. 3 மாநிலங்களில் பாஜக முன்னிலை - காங்கிரஸுக்கு ஆறுதல் தந்த தெலுங்கானா!

தெலுங்கானா தேர்தல் முடிவுகள் 2023

அரசியல் மறுமலர்ச்சிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் காங்கிரஸுக்கு, தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியிடம் (பிஆர்எஸ்) இருந்து ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 119 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சந்தரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி 40 இடங்களில் முன்னிலை பெற்று பின்தங்கி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றிக்கு தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த இவர் 2021ஆம் ஆண்டு தான் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியின் இணைந்தார்.

“பை பை கே.சி.ஆர்”.. தெலங்கானாவில் மண்ணை கவ்விய கே.சி.ஆர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!

தேர்தலுக்குப்பின்:

நான்கு மாநிலங்களில் மூன்றில் பாஜக வெற்றி நடை போடும் நிலையில், 12 மாநிலங்களில் அக்கட்சி தனியாக ஆட்சியமைக்க உள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தராகண்ட், ஹரியானா, உத்தரபிரதேசம், குஜராத், கோவா, அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கிளல் பாஜக தனித்து ஆட்சி செலுத்தும். இது தவிர மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியின் கூட்டணியிலும் பாஜக அங்கம் வகிக்கிறது.

இரண்டாவது பெரிய தேசிய கட்சியான காங்கிரஸ், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரை இழந்த பிறகு மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியைத் தொடர முடியும். கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து ஆட்சி செய்யும். இது தவிர, காங்கிரஸும் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் ஆளும் கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தமிழ்நாட்டிலும் ஆட்சியில் அங்கம் வகிக்காவிட்டாலும், ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணியில் இருக்கிறது.

நோ டென்ஷன்.. 2024 தேர்தலை பாத்துக்கலாம் ஜி.. இந்தியா கூட்டணியில் முக்கிய ட்விஸ்ட்.. திமுக வேற இருக்கே..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios