தேர்தல் 2023.. எல்லாம் பிரதமரின் ஆசி.. மத்திய பிரதேசத்தில் முழு பெரும்பான்மை - சிவராஜ் சவுகான் உருக்கம்!
Madhya Pradesh Election Results : 230 இடங்கள் கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில், பாஜக 124 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர் நின்ற காங்கிரஸ் 100 இடங்களுடன் பின்தங்கியுள்ளது.
இந்த சட்டசபை தேர்தலில் பாஜக ஏற்கனவே தங்கள் பாதி வழியை வெற்றிகரமாக தாண்டிவிட்டது என, சில நிமிடங்களுக்கு முன்னதாகவே முன்னிலை பெற்றுள்ள நிலையில், அக்கட்சி முழு பெரும்பான்மையுடன் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கும் என, பா.ஜ.வின் சிவராஜ் சிங் சவுகான் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
நான்கு மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்கள் கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் 230 இடங்கள் கொண்ட சட்டசபையில் பாஜக 124 இடங்களை கைப்பற்றியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் 100 இடங்களுடன் பின்தங்கியுள்ளது, ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதி: கமல்நாத் நம்பிக்கை!
இதனையடுத்து ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ள பா.ஜ.வின் சிவராஜ் சிங் சவுகான் "மக்களின் ஆசீர்வாதத்துடனும், பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையுடனும், பாஜக மீண்டும் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று அந்த பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியா, மக்களின் நம்பிக்கை பாஜகவுடன் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். "முழுமையான முடிவுகள் வரும் வரை நாங்கள் காத்திருப்போம். நாங்கள் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். பிரதமர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், நலத்திட்டங்களும் தான் இத்தகைய ஆணையுக்குக் காரணம்" என்றார் அவர்.
தெலுங்கானா தேர்தல் 2023.. MLAக்களை காக்க ஐதராபாத்தில் தங்கிய துணை முதல்வர் சிவகுமார் - நிலவரம் என்ன?
இன்று டிசம்பர் 3ம் தேதி இந்திய அளவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் 2க்கு 2 என்ற விகிதத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் காட்சிகள் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.