ராஜஸ்தானில், முதலமைச்சர்  அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள தலைமை செயலகத்தில், மாநில உணவு வழங்கல் துறையின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், நடைபெற்றது. 

உணவு வழங்கல் துறை செயலர், முக்தா சிங், தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. உணவு வழங்கல் துறை மற்றும் தேசிய தகவல் மைய அதிகாரிகள் 10 பேர், கூட்டத்தில் பங்கேற்றனர். 

மேலும், 33 மாவட்டங்களை சேர்ந்த வினியோக அதிகாரிகள், 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகள் பேசிக் கொண்டிருந்தபோது, கம்ப்யூட்டர் திரையில், திடீரென ஆபாச, 'வீடியோ' ஓடியது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக கம்ப்யூட்டரை ஆய்வு ஆஃப் செய்தனர். பின்னர் .இந்த தவறு யாரால் நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தருமாறு, தேசிய தகவல் மைய இயக்குனரிடம், துறை செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.