மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் மண்டலப் போக்குவரத்து அதிகாரி (RTO) வீட்டில் மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தியபோது அங்கிருந்த பொருட்களைக் கண்டு மலைத்துவிட்டார்கள்.

மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் மண்டலப் போக்குவரத்து அதிகாரி (RTO) வீட்டில் மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தியபோது அங்கிருந்த பொருட்களைக் கண்டு மலைத்துவிட்டார்கள்.

வெளி உலகிற்குதான்ஆர்டிஓ அதிகாரியாக வாழ்ந்துள்ளாரேத் தவிர அவரின் வாழ்க்கை அதானியைப் போல், அம்பானியைப் போல் சொகுசாக இருந்துள்ளது. 5நட்சத்திர ஹோட்டலில் தங்குவதைப் போன்ற அனைத்து வசதிகளும் வீட்டில் இருந்துள்ளதைக்கண்டு அதிகாரிகள் பெருமூச்சுவிட்டுள்ளனர். 

Scroll to load tweet…

5 நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் வசதிகள், ஜக்குசி, மினிநீச்சல் குளம், மினி தியேட்டர், 6 பங்களா, 2 கார்கள், ரூ.16லட்சத்தில் 2 சொகுசு பைக், மினி பார், 10ஆயிரம் சதுர அடியில் பங்களா ரூ.15 லட்சம் ரொக்கள், நகைகள் என அதிகாரிகள் மலைத்துவிட்டார்கள்.

பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் விடுதலையானவர்களில் சிலர் நல்ல பிராமணர்கள்: பாஜக எம்எல்ஏ சான்றிதழ்

ஜபல்பூரில் உள்ள மண்டல போக்குவரத்து அதிகாரியாக இருப்பவர் சந்தோஷ் பால். இவரின் மனைவி ரேஹா பால். இவரும் ஆர்டிஓ அலுவலகத்தில் கிளார்காக பணியாற்றி வருகிறார்.

10 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர்:மக்களின் பங்களிப்பால் சாத்தியம்:பிரதமர் மோடி

இவர்கள் இருவரும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக மாநில பொருளாதாரக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு புகார் சென்றது. இதையடுத்து, புதன்கிழமை இரவு திடீரென பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் சந்தோஷ் பால் இல்லத்தில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டு, வியாழக்கிழமை வரை தொடர்ந்தது.

Scroll to load tweet…

இந்த ரெய்டில் ஈடுபட்ட அதிகாரிகள் சந்தோஷ் பால், ரேஹா பால் இருவரும் சேர்த்த சொத்துக்களையும், அசையும், அசையா சொத்துக்களையும் பார்த்து மலைத்துவிட்டார்கள். இருவரும் தங்களின் வருமானத்துக்குஅதிகமாக 600 மடங்கு சொத்துக்களைச் சேர்த்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தோஷ் பாலுக்கு சொந்தமான 3 இல்லத்தில் ரெய்டு நடந்தது. வாரிகாட் சாலையில் 1247சதுர அடி கொண்ட ஒரு வீடு, சங்கர் ஷா வார்டு பகுதியில் 1,150 சதுரஅடி கொண்ட ஒரு வீடு, அதே பகுதியில் மேலும் இரு வீடுகளில் ரெய்டு நடந்தது. 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு

இந்த ரெய்டில் சந்தோஷ் பால் இல்லத்தில் 5 நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் அனைத்து வசதிகளும் இருந்தன. மினி தியேட்டர், ஜக்குசி, நீச்சல் குளம், ரூ.16 லட்சத்தில்இரு சொகுசு பைக், 2 கார்கள், ரூ.15 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் என வந்து கொண்டே இருந்தன.

பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்பி தேவேந்திர சிங் ராஜ்புத் கூறுகையில் “ புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு சந்தோஷ் பால் இல்லத்தில் ரெய்டு தொடங்கி வியாழக்கிழமை வரை நீடித்தது.

Scroll to load tweet…

அவரின் வீட்டில் ஏராளமான சொகுசு வசதிகள் இருந்தன. மினி தியேட்டர், மினி பார், ஜக்குசி, நீச்சல்குளம், சொகுசு கார்கள் 2, 2 சொகுசு பைக்குகள் , ரூ.16 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் என ஏராளமானவை மீட்கப்பட்டன. அவை மதிப்பிடும் பணி முடியவில்லை” எனத் தெரிவித்தார்