bilkis bano: பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் விடுதலையானவர்களில் சிலர் நல்ல பிராமணர்கள்: பாஜக எம்எல்ஏ சான்றிதழ்
பில்கிஸ் பானு கூட்டுப்பலாத்கார வழக்கில் விடுதலையான 11 பேரில் சிலர் நல்ல குணமுள்ள பிராமணர்களும் உள்ளனர் என்று என்று பாஜக எம்எல்ஏ நற்சான்றிதழ் அளித்துள்ளார்.
பில்கிஸ் பானு கூட்டுப்பலாத்கார வழக்கில் விடுதலையான 11 பேரில் சிலர் நல்ல குணமுள்ள பிராமணர்களும் உள்ளனர் என்று என்று பாஜக எம்எல்ஏ நற்சான்றிதழ் அளித்துள்ளார்.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானுவையும், அவரின் குடும்பத்தினர் 7 பேரையும் ஒரு கும்பல் தாக்கியது.
மத்திய அரசை விட சிறப்பாக செயல்படுகிறோம்: தமிழகம் ஏன் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கணும்: பிடிஆர் விளாசல்
அந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் பில்கிஸ் பானு 5 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவரைத் தாக்கிய அந்த கும்பல் அவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்தது. அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயதுக் குழந்தை உல்ளிட்ட 7 பேரையும் கொலை செய்து அந்த கும்பல் தப்பி ஓடியது.
இந்த வழக்கில் 11 பேரை சிபிஐ கைதுசெய்தது. இவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது இதை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பில்கிஸ் பானு அளித்த பேட்டியில்கூட இனிமேல் சுதந்திரமாக, பாதுகாப்புடன்,அமைதியுடன் வாழும் உரிமையை அரசு வழங்கிட வேண்டும் என அச்ச உணர்வுடன் தெரிவித்திருந்தார்.
பாஜகவில் தேர்தலே இல்லை: மோடி சொல்றதுதான் : சுப்பிரமணியன் சுவாமி சுளீர் விமர்சனம்
இதுகுறித்து கோத்ரா தொகுதி பாஜக எம்எல்ஏ சி.கே.ரெளல்ஜி அளித்த பேட்டி அளித்தார். 11 குற்றவாளிகளையும் விடுவிப்பதுகுறித்து பரிசீலிக்க குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்திருந்தது, அதில் ரெளல்ஜியும் இடம் பெற்றிருந்தார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையானவர்கள், குற்றம் செய்தார்களா, 15 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்புதான் விடுவிக்கப்பட்டார்களா என எனக்குத் தெரியாது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி குஜராத் அரசு முடிவு எடுத்தது. அந்த குற்றவாளிகளின் நடத்தையைப் பார்த்து முடிவு எடுத்து தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுவித்துள்ளோம்.
சிறையின் கண்காணிப்பாளர், ஜெயலரிடம் 11 பேரின் நடத்தை, செயல்பாடுகள் குறித்து கேட்டோம். அவர்களின் நடத்தை சிறையில் நல்லவிதமாக இருந்தது எனத் தெரிவித்தார்கள். அதிலும் குற்றவாளிகளில் சிலர் பிராமணர்கள். அவர்கள் நல்ல மதிப்புள்ள பிராமணர்கள். இந்த குற்றவாளிகள் இதில் சிக்கவைக்கப்பட்டிருக்கலாம்.
குற்றவாளிகள் விடுதலையால் நீதித்துறை மீதான நம்பிக்கை தளர்ந்துவிட்டது: பில்கிஸ் பானு வேதனை
கடந்த காலத்தில் குடும்பத்தினரின் செயல்பாடுகளில் இவர்கள் இதில் சிக்கியிருக்கலாம். கலவரம் நடந்தபோது, அதில் ஈடுபடாதவர்கள் பெயர்கூட சேர்க்கப்படலாம். ஆனால், இவர்கள் 11பேரும் குற்றம் செய்தார்களா என எனக்குத் தெரியாது. சிறையில் அவர்களின் நடத்தையை அறிந்து ரெமிஸன் மூலம் விடுவித்தோம். சிறையில் வெளியே வந்த 11 பேருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது பொய். அவர்களை யாரும் வரவேற்கவில்லை
இவ்வாறு ரெளல்ஜி தெரிவித்தார்