மத்திய அரசை விட சிறப்பாக செயல்படுகிறோம்: தமிழகம் ஏன் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கணும்: பிடிஆர் விளாசல்
மத்திய அரசை விட பொருளாதாரத்திலும், நிர்வாகத்திலும் சிறப்பாக தமிழகம் செயல்படும்போது, எதற்காக மற்றவர்கள் கருத்தை தமிழகம் கேட்க வேண்டும், அவர்களுக்காக ஏன் கொள்கையை மாற்ற வேண்டும் என்று தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசை விட பொருளாதாரத்திலும், நிர்வாகத்திலும் சிறப்பாக தமிழகம் செயல்படும்போது, எதற்காக மற்றவர்கள் கருத்தை தமிழகம் கேட்க வேண்டும், அவர்களுக்காக ஏன் கொள்கையை மாற்ற வேண்டும் என்று தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளிக்கும் இலவசங்கள், தேர்தலுக்கு பின் வழங்கும் இலவசங்களை ஒழுங்குபடுத்த வேண்டும், வரையறை செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி நடக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை பறித்து, அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயே உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடுகையில் “ இலவசங்கள் வழங்குவதால் நாட்டின் பொருளாதாரம் நாசமாகும். வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை நன்றாக சிந்தித்து அளிக்கமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் கூறுகையில் “ இலவசங்கள் வழங்குவதற்காக எந்தக் கட்சியின் நாங்கள் ஆங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட முடியாது. அது ஜனநாயகத்து்கு விரோதமான செயல். நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது.
குற்றவாளிகள் விடுதலையால் நீதித்துறை மீதான நம்பிக்கை தளர்ந்துவிட்டது: பில்கிஸ் பானு வேதனை
இந்தியா போன்ற வறுமைநிலவும் நாட்டில், இந்த இலவசங்களை நிராகரிக்க முடியாது. அதேநேரம் பொருளாதாரத்தில் ஏற்படும் பணஇழப்பை, மக்கள் நலத்திடங்களுக்கும், உள்கட்டமைப்புக்கும் பயன்படுத்துவதும் சமநிலை ஏற்படுத்துவதும் அவசியம்” எனத் தெரிவித்தது.
இந்நிலையில் இந்தியாடுடே தொலைக்காட்சி சார்பில் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் பங்கேற்றார். அப்போது அவரிடம் இலவசங்கள் தரக்கூடாது என்று மத்திய அரசு கூறுவது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு அவர்பதில் அளித்துப் பேசிய விஷயங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, வைரலாகி வருகிறது அவர் பேசியதாவது:
இலவசங்கள் தரக்கூடாது என்று நீங்கள் கூறுவதை நாங்கள் கேட்க வேண்டும் என்பதற்கு சட்டரீதியாக ஏதாவது விதி இருக்கிறதா. உங்களிடத்தில் பொருளாதாரத்தில் இரு டாக்டர் பட்டம் பெற்ற பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்களா, நோபல் ப ரிசு பெற்ற வல்லுநர்கள் இருக்கிறார்களா, அல்லது ஏதாவது ஒருவகையில் எங்களை விட சிறப்பாக இருக்கிறீர்களா.
தொழிலதிபர் கெளவுதம் அதானிக்கு விஐபி 'Z' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு ஒப்புதல்
உங்களின் திறன் அடிப்படையான சாதனைப்ப ட்டியலில் பொருளாதாரத்தில் சிறப்பாகச் செயல்படுகிறீர்களா, நாட்டின் கடனை குறைத்துவிட்டீர்களா, தனிநபர் வருமானத்தை உயர்த்திவிட்டீர்களா, வேலைவாய்ப்பை உருவாக்கிவிட்டீர்களா அப்படிஏதாவது செய்து இருந்தால் நீங்கள் சொல்வதை தமிழகம் கேட்கலாம்.அப்படியிருக்கும்போது எதற்காக நாங்கள் மற்றவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும்.
நான் கடவுளை நம்புகிறேன் அதற்காக கடவுள் எனச் சொல்லும் நபர்களை நம்பமாட்டேன். எதற்காக மற்றவர்கள் கருத்தை கேட்க வேண்டும். மக்களுக்கு எதைச் செய்ய வேண்டும் என்பதை தேர்தல் முடிவு செய்யும். முதல்வர் எனக்கு நிதிஅமைச்சர் பணி கொடுத்துள்ளார், அதை சிறப்பாகச் செய்து வருகிறேன்.
குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விதியில் மாற்றமா? ரயில்வே துறை விளக்கம்
மத்திய அரசைவிட சிறப்பாக தமிழகம் செயல்பட்டுவருகிறது. அடுத்த 3 ஆண்டுகளுக்கும் சிறப்பாகச் செய்ய முடியும். மத்திய அரசுக்கு வரிரீதியாக தமிழகம் அதிகமாக பங்களிப்பு செய்கிறது. ஒருரூபாய் மத்திய அரசுக்கு நாங்கள் அளித்தால், 33 பைசா எங்களுக்கு கிடைக்கிறது.
அப்படி இருக்கும்போது எதற்காக நீங்கள்(மத்திய அ ரசு) சொல்வதை நாங்கள் கேட்க வேண்டும். எங்கள் மாநிலத்தைவிட சிறப்பாகச் செயல்படுகிறீர்களா பின்னர் எதற்காக உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும். எந்த அடிப்படையில் எங்கள் கொள்கைகளை மாற்றவேண்டும்.
இவ்வாறு பிடிஆர் பழனிவேல்ராஜன் தெரிவித்தார்