மத்திய அரசின் ரோஜ்கர் மேளா(வேலைவாய்ப்பு கண்காட்சி) மூலம் 2வது கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்கினார்.

மத்திய அரசின் ரோஜ்கர் மேளா(வேலைவாய்ப்பு கண்காட்சி) மூலம் 2வது கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்கினார்.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அனைத்து துறைகளையும் கடந்த ஜூன் மாதம் கேட்டுக்கொண்டார். அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் ரோஜ்கர் மேலா திட்டத்தில் பல்வேறு துறைகளில் 75ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். 

ராஜீவ்காந்தி கொலை வழக்கு… 6 பேரின் விடுதலைக்கு எதிராக காங். மறுசீராய்வு மனு!!

இந்நிலையில் 2வது கட்டமாக மத்திய அரசின் ரோஜ்கர் மேலா, இன்று டெல்லியில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற பிரதமர் மோடி, 71ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். 

நாடுமுழுவதும் 45 இடங்களில் புதிய வேலைவாய்ப்பு பெற்றோருக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, காணொலி மூலம் வேலைவாய்ப்புச் சந்தை தொடங்கியதும், பணிநியமனக் கடிதங்கள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டன. குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில்தேர்தல் நடப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அந்த மாநிலங்களில்மட்டும் வேலைவாய்ப்புக் கண்காட்சி நடக்கவில்லை.

நடைபயணம் மூலம் அதிகாரத்துக்கு வர துடிக்கிறார்கள்: ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் “ புதியவேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிகமான முன்னுரிமையும்,வாக்குறுதியை நிறைவேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிகமான வேலைவாய்ப்பு உருவாகும், இளைஞர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கும், தேசிய வளர்ச்சியில் அவர்கள் பங்களிப்புக்கு உதவும் என்று எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும் கர்மயோகி பிரரம்ப் மாதிரியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாதிரியின் மூலம், பல்வேறு துறைகளுக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, ஆன்லைன் வழியாக புத்தாக்க பயிற்சியும் வழங்கும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஆதாருடன் பான் கார்டு இணைத்து விட்டீர்களா? காலக்கெடு முடிகிறது!!

இதில் அரசு ஊழியர்களின் விதிகள், பணியிடத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் எனும் விதிகள், நேர்மை, மனிதவளக் கொள்கைகள், அரசின் சலுகைகள், படிகள் ஆகியவை குறித்து இந்த ஆன்லைன் வகுப்பில் இருக்கும். இந்த வகுப்பு மூலம் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றவர்கள் தங்களை பணிக்கு ஏற்றார்போல் தங்களை தகவமைத்துக்கொள்ள முடியும்.