Asianet News TamilAsianet News Tamil

Gujarat Election 2022:நடைபயணம் மூலம் அதிகாரத்துக்கு வர துடிக்கிறார்கள்: ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு

மக்களால் ஆட்சியில் இருந்து தூக்கிவீசப்பட்டவர்கள் இன்று நடைபயணம் மூலம் அதிகாரத்துக்கு வருவதற்கு துடிக்கிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை மறைமுகமாக பிரதமர் மோடி இன்று சாடினார்.

PM Modi digs at Rahul Gandhi: claims that those who have been deposed are staging a yatra to regain power.
Author
First Published Nov 21, 2022, 3:12 PM IST

மக்களால் ஆட்சியில் இருந்து தூக்கிவீசப்பட்டவர்கள் இன்று நடைபயணம் மூலம் அதிகாரத்துக்கு வருவதற்கு துடிக்கிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை மறைமுகமாக பிரதமர் மோடி இன்று சாடினார்.

குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய இரு தேதிகளில்  தேர்தல் நடக்கிறது, டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 

குஜராத் தேர்தலில் வாரிசு அரசியல்!வெற்று வார்த்தை பாஜக, மாறாத காங்கிரஸ்:20 பேர் போட்டி

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பாஜக, ஆட்சியைத் தக்கவைக்க கடுமையாகப் போராடுகிறது. இதற்கு முன்புவரை காங்கிரஸ்,பாஜக என இரு கட்சிகளுக்கு இடையிலான தேர்தலாக இருந்தது. ஆனால், தற்போது ஆம் ஆத்மி கட்சியும் கடுமையாகபோட்டி அளிக்கிறது.

PM Modi digs at Rahul Gandhi: claims that those who have been deposed are staging a yatra to regain power.

குஜராத்தில் தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு பிரதமர் மோடியும் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி நேற்று மட்டும் 6 பொதுக்கூட்டங்களில் பேசினார். 
இந்நிலையில் சுரேந்திரநகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்று பேசியதாவது: 

இந்த நாட்டுக்குத் தேவையான 80 சதவீத உப்பை குஜராத் மாநிலம் தயாரித்து வழங்குகிறது. ஆனால், குஜராத் உப்பைச் சாப்பிட்டு சிலர் இந்த மாநிலத்தைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள்.

நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடக்கம்: எதற்கு முக்கியத்துவம்?

மக்களால் ஆட்சியில் இருந்து நீண்டகாலத்துக்கு முன்பே தூக்கிவீசப்பட்டவர்கள், தற்போது யாத்திரை மூலம் மீண்டும் ஆட்சி, அதிகாரத்துக்கு வருவதற்கு துடிக்கிறார்கள். கடந்த 40 ஆண்டுகளாக நர்மதா அணைத் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் தடுத்து நிறுத்தியவர்களுடன்தான் நடைபயணம் செல்கிறார்கள். 

40 ஆண்டுகளாக நர்மதா அணையை செயல்படுத்தவிடாமல் தடுத்தவர்களைத் தண்டிக்க குஜராத் மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். தேர்தலின்போது குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றிப்பேசாமல் தங்களின் தரத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

பனாராஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தனி இருக்கை!: பிரதமர் மோடி அறிவிப்பு

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி, தாழ்த்தப்பட்டவர், பிறர் வாழ்க்கையோடு விளையாடுபவர், இழிவானர் என்று என்னை பேசினார்கள். இப்போது, வளர்ச்சியைப் பற்றிப் பேசாமல், என் தரத்தைப் பற்றி பேசுகிறார்கள். மோடிக்கு எந்த தரநிலையும் இல்லை, மோடி மக்களின் சேவகன்

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios