Gujarat Election2022 :குஜராத் தேர்தலில் வாரிசு அரசியல்!வெற்று வார்த்தை பாஜக, மாறாத காங்கிரஸ்:20 பேர் போட்டி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பாஜகவைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாரிசுகளை களமிறக்குவதில் அதிகமான ஆர்வம் காட்டியுள்ளனர். இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களில் 20 பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

Gujarat Assembly elections: Son gain 20 seats as dynasts from the BJP and Congress campaign

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பாஜகவைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாரிசுகளை களமிறக்குவதில் அதிகமான ஆர்வம் காட்டியுள்ளனர். இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களில் 20 பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

வாரிசு அரசியலை எதிர்ப்பதாக பிரதமர் மோடி ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் பேசினாலும் குஜராத் தேர்தலில் அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் மகன்கள் 7 பேர் களத்தில் உள்ளனர்.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே பதவி என்ற கொள்கையோடு இருக்கும் காங்கிரஸ் கட்சியும், வாரிசு அரசியல் பற்றி கவலைப்படாமல் 13பேருக்கு வாய்ப்பு அளித்துள்ளது.

குஜாரத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடக்கிறது.

Gujarat Assembly elections: Son gain 20 seats as dynasts from the BJP and Congress campaign

கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் சர்ச்சை! முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் பிரசங்கம் செய்ய அழைப்பு

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாரிசு அரசியல் என்ற காரணியாகவும், அதுவே சில நேரங்களில் வெற்றிக் காரணியாகவும் பார்க்கப்படுகிறது. பாஜக வாரிசு அரசியலை முற்றிலுமாக வெறுக்கிறது, ஒதுக்குகிறது. ஆனால், தேர்தல் என்று வரும்போது, வெற்றிக்காரணியாக வாரிசுஅரசியல் வரும்போது அதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு குறிப்பிட்ட தொகுதியில் ஒரு வேட்பாளருக்கு அதிகமான வெற்றி வாய்ப்புகள் இருக்கும்போது அவருக்குப் பதிலாக அவரின் வாரிசுகளை களமிறக்கினாலும் அங்கு வெற்றி கிடைக்கும் என்ற நிலை இருந்தால் வேறுவழியின்றி அதை ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. 

வாரிசு அரசியலை புறந்தள்ளி வேறுவேட்பாளருக்கு வாய்ப்புக் கொடுத்தால், வெற்றி வாய்ப்பின் தாங்களே மண்அள்ளிபோட்டது போன்றதாகும். அதனால்தான் வாரிசு அரசியல் என்பது தேர்தல் நோக்கில் தவிர்க்க முடியாததாகியுள்ளது.  இது குஜராத் தேர்தலிலும் விதிவிலக்கு அல்ல.

நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடக்கம்: எதற்கு முக்கியத்துவம்?

Gujarat Assembly elections: Son gain 20 seats as dynasts from the BJP and Congress campaign

காங்கிரஸில் 10 முறை எம்எல்ஏவாக இருந்தவரும் பழங்குடியினத் தலைவரான மோகன்சின் ரத்வா கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பரிசாக அவரின் மகன் ராஜேந்திரசின் ராத்வாவுக்கு சோத்தா உதேபூர் தொகுதியில் போட்டியிட பாஜகவாய்ப்பு அளித்துள்ளது.

இதனால் ராஜேந்திரசின்னும் காங்கிரஸ் வேட்பாளர் சங்கர்ராம்சின் ராத்வுக்கும் நேரடி போட்டி இந்தத் தொகுதியில் நிலவுகிறது. சங்கர்ராம்சின் முன்னாள் ரயில்வே அமைச்சர் நரன்ராத்வாவின் மகன். 
அகமதாபாத் மாவட்டம், சனாநந்த் தொகுதியின் எம்எல்ஏ கனு படேல், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ கரண்சின் படேலின் மகன். கடந்த 2017ம் ஆண்டுபாஜகவில் படேல் பாஜாவில் இணைந்தார், இந்த தேர்தலில் அவரின் மகன் கனுபடேலுக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.

அதேபோல 2 முறை எம்எல்ஏ ராம்சின் பார்மர் மகன் யோகந்திர பார்மருக்கு தசரா தொகுதியில்  பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.  அகமதாபாத் மாவட்டம், தணில்மிடா தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஷைலேஷ் பார்மர். இவர் முன்னாள்எம்எல்ஏ மனுபாய் பார்மரின் மகன். இப்போது மீண்டும் அதே தொகுதியில் சைலேஷ் பார்மருக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த முகேஷ் அம்பானியின் மகள்... குடும்பத்தினர் மகிழ்ச்சி!!

குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவின் மகன் மகேந்திரசிங் வகேலாவுக்கும் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மாதம்தான் மகேந்திரசிங் வகேலா காங்கிரஸில் சேர்ந்தார், இவருக்கு பயாத் தொகுதியில் வாய்ப்பு வழங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. 

Gujarat Assembly elections: Son gain 20 seats as dynasts from the BJP and Congress campaign

முன்னாள் முதல்வர் அமர்சின் சவுத்ரியி் மகன் துஷார் சவுத்ரிக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. பர்தோலி தொகுதியில் துஷார் போட்டியிடுகிறார் இவர் ஏற்கெனவே இருமுறை எம்பியாகவும் இருந்தவர்
பாஜக முன்னாள் எம்.பி. வித்தால் ராடியாவின் மகன் ஜெயேஷ் ராடியா. இவருக்கு பாஜக சார்பில் ஜேத்பூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

அரசியல் ஆய்வாளர் ரவிந்திர திரிவேதி கூறுகையில் “ பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளிலும் பலமுன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தங்கள் வாரிசுகளை களமிறக்கியுள்ளனர். தங்கள் தொகுதியில் மிகுந்த செல்வாக்கு கொண்டர்வர்களாக இருப்பதாக வெற்றி வாய்ப்பைக் கருத்தில் கொண்டு கட்சிகளும் வாரிசு அரசியலை ஏற்கின்றன. இந்த தலைவர்களுக்கு மாற்றாக வேறு தலைவர்களையும் கட்சிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்குகின்றன. 

இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமனம்

வாரிசு அரசியலை வெறுத்து,வேறுவேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கினால், நிச்சயமாக தோல்வியை கட்சிகள் சந்திக்கும் என்பதாலும், மாற்று வேட்பாளர் இல்லாததாவும் வாரிசு அரசியல் எதிர்ப்பு வார்த்தை அளவில்தான் இருக்கிறது. தேர்தல் வெற்றிக்கு வாரிசு அரசியலும் முக்கியக் காரணியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios