இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமனம்
இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்ந்த அமைப்பு. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தலை நடத்தும் மிக முக்கிய பொறுப்பை கொண்டது தேர்தல் ஆணையம்.
உருக்கு, இரும்பு தாது ஏற்றுமதி வரி ரத்து! சில பொருட்கள் இறக்குமதிக்கு வரிஉயர்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுஷில் சந்திரா கடந்த மே மாதம் ஓய்வுபெற்றதையடுத்து, ராஜீவ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டுவருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே உள்ளார்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தலையடுத்து, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Kasi Tamil Sangamam: காசி தமிழ் சங்கமம்: 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு