பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பலாத்கார சாமியார் ராம்ரஹீமின் மகள் ஹனி பிரீத், பாஜக மீது புகார் தெரிவித்து பரபரபப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராம் ரகீம் சாமியார், பாலியல் வன்முறை வழக்கில், கடந்த 2002 ஆம் ஆண்டு பதியப்பட்டது. அதன் பிறகு, 14 ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கு விசாரணையின் முடிவில், குற்றவாளி என அரியானா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. 

ராம் ரகீம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று 10 ஆண்டு காலம் அவருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

ராம் ரகீம்-க்கு அளிக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், சாமியார் ராம் ரகீமின் மகள், பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர், கடந்த அரியானா சட்டமன்ற தேர்தலின்போது, மாநில பாஜகவினர் எங்களை அணுகினர். 

பாபாவின் மீதான பலாத்கார வழக்கில் தண்டனை பெறாமல் இருக்க உதவுவதாகவும், அதற்கு பிரதிபலனாக தேர்தலில் பாஜகவுக்கு, பாபா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரினர்.

அதன்படி கடந்த தேர்தலில் பாஜகவை பாபா ஆதரித்தார். இதனால்தான் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், பாஜக சொன்னடி செய்யவில்லை என்று கூறியுள்ளார்.