ராமர் கோயில் கும்பாபிஷேகம் : நேரலையில் தியேட்டரில் பார்க்கலாம்.. PVR நிறுவனம் அறிவிப்பு..
ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வை திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக PVR INOX திரையரங்கு நிர்வாகம்அறிவித்துள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வை திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக PVR INOX திரையரங்கு நிர்வாகம்அறிவித்துள்ளது.
இந்தியாவின் 70-க்கும் மேற்பட்ட நகரங்களில், 160-க்கும் அதிகமான திரையரங்குகளில் ராமர் கோவில் கும்பாபிஷேக. நிகழ்வு நேரடியாக ஒளிபரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவின் நேரடிக்காட்சி, 22-ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ஒளிபரப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை PVR INOX ஆப் அல்லது இணையதளம் மற்றும் பிற தளங்களில் ரூ.100 என்ற மலிவு விலையில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய திரைகளில் இந்த வரலாற்று நிகழ்வைக் காண ஆர்வமுள்ள பரந்த பார்வையாளர்களுக்கு ஒரு ட்ரிங்க் மற்றும் பாப்கார்ன் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது குறித்துப் PVR INOX நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி கெளதம் தத்தா பேசிய போது "இது போன்ற மகத்தான மற்றும் வரலாற்று நிகழ்வுகளை சமமான பிரமாண்டமான முறையில் பார்க்க வேண்டும் வேண்டும். சினிமா திரைகள் ஒரு கூட்டுக் கொண்டாட்டத்தின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும்.
நாடு முழுவதும் உள்ள பக்தர்களை, இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுடன் தனித்துவமான முறையில் இணைப்பது எங்களுக்கு ஒரு பாக்கியமாக இருக்கும் என்று கருதுகிறோம். மறக்கமுடியாத சினிமா அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டது, மேலும் இந்த வரலாற்று தருணத்தை எங்கள் பக்தர்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்று தெரிவித்தார்.
400 கிலோ பூட்டு.. அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பப்பட்ட இந்து மகா சபா தலைவரின் பரிசு..
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சி இந்தியா முழுவதிலும் உள்ள பல நகரங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்துக்களின் மிக முக்கியமான யாத்திரைத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் அயோத்தி, ராமர் பிறந்த இடம் என்பதால் இந்த இடம் புனித இடமாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து கோயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் முடிவடைந்தது.
இதையடுத்து வரும் 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி கவர்னர் ஆனந்திபென் படேல் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் மதியம் 12:15 மணி முதல் 12:45 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் குழந்தை ராமரின் சிலை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ஜனவரி 23-ம் தேதி முதல் பொதுமக்கள் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.